விளையாட்டுப் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்களின் சாதனை!

1 Min Read

கோயம்புத்தூர், ஏப். 10- இந்திய மருந்தியல் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு மற்றும் யுனைடெட் மருந்தியல் கல்லூரி இணைந்து மருந்தியல் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை கோயம் புத்தூர் யுனைடெட் மருந்தியல் கல்லூரியில் 28.03.2026 முதல் 29.03.2026 வரை தொடர்ந்து இரண்டு நாட்கள் நடத்தியது.

இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் இரா. செந்தாமரை,  ஷகிலா பானு, ஜெசிமா பேகம்,  விஜயலட்சுமி,  சாந்தா,  ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி,  திரிஷ்யா,  தினேஷ், கோகிலவாணி, சக்தி, ரெத்தினா,  கீர்த்தனா,  பிரகதி, சேதுராஜா,  திவ்ய ஜோதி மற்றும் ஷெரன் செல்சியா மொத்தம் 16 பேர் கலந்து கொண்டு செஸ், கேரம், எறி பந்து மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில்  முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை கேப்டனாக திகழ்ந்த எறிபந்து போட்டியில் சிறந்த எறிபந்து குழுவினருக்கான  (Best Throw Ball Team) பரிசுத்தொகையினையும் பாராட்டுச் சான்றித ழினையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

மேலும் வாக்கத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் 3 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்ததுடன் பேராசிரியர்கள் தினேஷ் மற்றும் ஷெரன் செல்சியா ஆகியோர்  அய்ந்து மற்றும் நான்காம்  இடங்களைப் பெற்று பதக்கங்களை வென்றனர்.

பேரா. சாந்தா செஸ் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.

இந்திய மருந்தியல் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் முனைவர் சங்கர், செயலாளர் முனைவர் சம்பத் குமார், முனைவர் ஜவஹர் மற்றும் யுனைடெட் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் அழகர் ராஜா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

தமிழ்நாடு முழுவது முள்ள 23 மருந்தியல் கல்லூரிகளிலிருந்து 350க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டியில் நமது பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *