தஞ்சை, செப். 24- தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், செப்டம்பர்-17 சமூகநீதி நாள் “தந்தை பெரியார் 148-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 12.09.2026 சனிக்கிழமையன்று தஞ்சை, மாதாக்கோட்டை சாலையில் உள்ள பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில், கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நிகழ்வை மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி ஒருங்கிணைத்து நடத் தினார். மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு வரவேற்று உரையாற்றினார். நிகழ்வுக்கு பெரியார் தொண்டர் கை. முகிலன் தலைமை யேற்று உரையாற்றினார்.
போட்டியை மாநில ப.க.அமைப் பாளர் கோபு.பழனிவேல் தொடங்கி வைத்து பேச்சுப் போட்டியின் நோக்கம், விதிமுறைகள், மாணவர்கள் எவ்வாறு பேச வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துக் கூறினார். போட்டியில் பல்வேறு கல்லூரி களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு “அறிவியல் மனப்பான் மையும், மூடநம்பிக்கையும் ” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவர்களுக்கு பரிசு வழங்குவ தற்கு முன்பாக மாநில கழக ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரும், கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வனும் கருத்துரையாற்றினார்கள்.
தொடர்ந்து, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநகர கழகச் செயலாளர் இரா.வீரகுமார், தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுத்தொகையும், சான்றி தழும் வழங்கினார்கள். இறுதியில் மாவட்ட ப.க.அமைப்பாளர் குழந்தை கவுதமன் நன்றி கூறினார். ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் ந.காமராசு, மாநில பெரியார் சமூகக் காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி.என். குணசேகரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் மாநகர கழக தலைவர் செ.தமிழ்செல்வன், மற்றும் அ.சாந்தி, அ.பெரியார் செல்வன், சாமி.கலைச் செல்வன், அ.குழந்தைசாமி, வெ.துரை, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரிசு பெற்றவர்கள்: முதல் பரிசு: ச.பிரபாகரன் அரசர் கலைக் கல்லூரி திருவையாறு, இரண்டாம் பரிசு: செ.வசந்தகுமார், அரசர் கல்லூரி திருவையாறு, மூன்றாம் பரிசு: போ.வீரலெட்சுமி தமிழ்ப் பல்கலைக் கழகம் – தஞ்சாவூர்.
சிறப்புப் பரிசுகள்: நா.அரவிந்தன் தமிழ்ப் பல்கலைக் கழகம் – தஞ்சாவூர், ர.தயாநிதி பண்ணாரி அம்மன் கல்லூரி ஈரோடு, அ.யமுனா சட்டக் கல்லூரி – திருச்சி.
நன்கொடையாளர்கள்: ஆசிரியை ந.பாவேந்தி ரூ.3,000, சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் பி.வி.இராமச்சந்திரன் நினைவாக அவருடைய மகன் பேராசிரியர் முனைவர் பி.வி.ஆர். வீரமணி ரூ.2,000, சுயமரியாதைச் சுடரொளிபெரியார் தொண்டர் தென்கொண்டார் இருப்பு செ. காத்தையன் நினைவாக அவர்களின் மகன்கள் கா.பிரபாகரன், கா.இமயவரம்பன் ஆகியோர் ரூ.2,000, பூதலூர் ஒன்றிய ப.க.செயலாளர் க.சிவசாமி பிரபு தனது துணைவியார் மறைந்த செல்வநாயகி நினைவாக ரூ.1,000, சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியை மலர்க்கொடி நினைவாக பாவலர் பொன்னரசு ரூ.1,000/= வழங்கினார்கள். வருகை தந்து பேசிய மாணவர்கள் அனைவருக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.100/= பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன் வழங்கினார். நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனை வருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
