இரா.இராகுல் – அ.இராகவி ஆகியோரது இணையேற்பு விழாவினை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

2 Min Read

கிருட்டினகிரி, ஜூன் 11- கிருட்டினகிரி பாண்டவர் குட்டை அ.இராதாகிருட்டினன் – சவுந்தரி ஆகியோரின் மகன் இரா.இராகுல் – திருப்பத்தூர், நத்தம் சி.அண்ணாமலை – அலமேலு ஆகியோரின் மகள் அ.இராகவி ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழாவினை  மத்தூர் சிவம்பட்டி சிறீபாரதி மகாலில் 07/06/2026 அன்று காலை 9.30 மணிக்கு கழகப்பொதுச் செயலாளர் முனைவர்  வீ.அன்புராஜ் பங்கேற்று  நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிட மணி  தலைமை வகித்துப் பேசினார்.

பாண்டவர் குட்டை இராதா கிருட்டினன் அனைவரையும் வரவேற்றார்.

மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் அறிமுக வுரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம் இணைப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணித் துணைச் செயலாளர் மு.இந்திரா காந்தி, வட்டாரக் கல்வி அலுவலர் (பணி நிறைவு) அ.சந்திரன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.செயராமன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழி லரசன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

திராவிடர் கழகம்

 

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் காஞ்சி பா.கதிரவன், கழகக் காப்பாளர் பழ.பிரபு, மாநில மகளிரணிப் பொருளாளர் அகிலா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் கே.சி.எ.சிற்றரசு, மா.செல்லதுரை, மாநில மாணவர் கழக வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலாளர் ச.மணிமொழி, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன், அரூர் மாவட்டத் தலைவர் விடுதலை அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி மாவட்டத் தலைவர் பீம. தமிழ்பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் சி.முருகேசன், ஒன்றியத் தலைவர் சா.தனஞ் செயன், ஒன்றியச் செயலாளர் வி.திருமாறன், மாவட்டத் தொழிலாளரணித் தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா. சிலம்பரசன், ப.க. நிர்வாகிகள் மா.திராவிடராசன், இரா.பழனி, பொன்.சிவக்குமார், சே.ஜானகிராமன், ஊற்றங்கரை ஒன்றியச் செயலாளர் செ.சிவ ராஜ், மத்தூர் அ.சாமிநாதன், சே.இராமஜெயம், மகளிரணி முருகம்மாள், உண்ணாமலை, செல்வி, மாணவர் கழக வெ. தரணி உள்பட கிருட்டினகிரி, திருப்பத்தூர், அரூர், தருமபுரி ஆகிய மாவட்ட கழகத்தின் நிர்வாகிகளும் தோழர்களும் இணையேற்பு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

07.06.2026இல் பிறந்த நாள் காணும் மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊ.செயராமன் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர்  வீ.அன்பு ராஜ் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

திராவிடர் கழகம்

கழகப் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு

இணையேற்பு விழாவிணை நடத்தி வைக்க மத்தூர் வருகை தந்த கழகப்பொதுச் செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி மற்றும் மணமக்களின் சார்பாக மணமகளின் தந்தை இராதாகிருட்டினன் ஆகியோர் சால்வை அணிவித்து மலர்;f கொத்து வழங்கி வரவேற்றனர்.

நிறைவாக ஒன்றிய மகளி ரணித் தலைவர் இரா.சவுந்தரி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *