கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கரூர், செப். 7- கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் காந்திகிராமம் குமார் தையலகத்தில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் 5.9.2026 அன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அனைவ ரையும் வரவேற்று மாவட்டச் செயலாளர் காளிமுத்து வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் மற்றும் மாநில இளைஞரணிச் செயலா ளர் நாத்திக பொன்முடி ஆகியோர் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை மிக எழுச்சியுடனும், கழகத் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி தலைமை செயற்குழு எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார்கள்.

மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

செப்டம்பர் 3 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறை வேற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மாவட்டக் காப்பாளர் வே ராஜு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகநாதன், அன்பு, மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், தாந்தோணி ஒன்றிய அமைப்பாளர் வெங்ககல்பட்டி கணேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொம்மன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள் செயலாளர் வடிவேல், இளைஞர் அணி அமைப்பாளர் காந்திகிராமம் குமார்,  இளைஞர் அணி துணைச் செயலாளர் நைஸ் சபாபதி, நகரத் தலைவர் சதாசிவம், பெரியார் பெருந்தொண்டர்கள் புலியூர் வீரமணி, குண சேகரன் மாணவர் கழகத் தோழர் கெவின் மோசஸ், வேலாயுதம்பாளையம் மோகன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண் டனர்.

நிகழ்ச்சியில் நிறைவாக நன்றி உரையை பொதுக் குழு உறுப்பினர் ஜெக நாதன் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *