நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப்.23- இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிச் சேவைகள் நிறுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதுமுள்ள வங்கி ஊழியர்கள் செப். 26, 27 வார இறுதி நாள்களைத் தொடர்ந்து வரும் செப். 28, 29, 30 ஆகிய 3 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

வங்கி ஊழியர்கள் 90 சதவீதம் பேரை பிரதி நிதித்துவப் படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

2024 ஊதிய ஒப்பந்தத்திற்குப் பின் நிலுவையில் உள்ள முக்கிய கோரிக்கையான ‘வாரத்திற்கு 5 நாள்கள் வேலை’ என்கிற திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

மேலும், செயல்திறன் சார்ந்து வழங்கப்படும் ஊக்கத்தொகை முறை தன்னிச்சையாகவும், பாகுபாடான முறையிலும் திருத்தப்பட்டதாகக் கூறி அதில் மாற்றங்களைக் கோருகின்றனர்.

அதுதவிர, ஓய்வூதி யத்தை மேம்படுத்துதல், ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே மாதிரியான அகவிலைப்படி வழங்குதல், தேசிய ஓய் வூதிய முறைக்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல், நிலுவையில் உள்ள பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினை களுக்குத் தீர்வு காணுதல் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த பணிகளை செப். 28-க்கு முன்னதாக முடித்துக் கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள் வேலைநிறுத்த காலத்தில் அத்தியாவசிய வங்கிச் சேவைகள் தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்பிஅய் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *