கழகக் களத்தில்…!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

25.09.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 218

மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்டத் தலைவர், கழக மகளிரணி) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: தந்தை பெரியார் அவர்களின் பெண் ஏன் அடிமையானாள்? தொடர் – 2 *நூல் மதிப்புரை: தோழர் ஓவியா (நிறுவனர், புதிய குரல்) *நன்றியுரை: மதுரை சு.மகாமதி *Zoom : 82311400757 Passcode : PERIYAR

26.9.2026 சனிக்கிழமை
நெடுவை அ.இராமச்சந்திரன் இராசம்மாள் அறக்கட்டளை சார்பில் 26ஆம் ஆண்டு நினைவு சொற்பொழிவு

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: சுந்தர் மகால், காவேரி நகர் பேருந்து நிறுத்தம் எதிரில், தஞ்சாவூர் *வரவேற்புரை: முனைவர் கி.சவுந்தரராஜன் *தலைமை: தொழில்வல்லுநர் த.இரமேசு (அன்பு மெஸ்) *முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்), கை.முகிலன் (பசுமை மளிகை) *வாழ்வும் தொண்டும் என்ற தலைப்பில் உரை: தமிழய்யா மா.கந்தசாமி *அ.இராமச்சந்திரன்-இராசம்மாள் படம் திறந்து சிறப்புரை: மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (உரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர், திமுக) *நன்றியுரை: க.கலைவாணி *அழைப்பின் மகிழ்வில்: கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் – இரா.கலாராணி, இரா.இராவணன் –
இரா.இரமணி.

27.9.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை விழா

கோபி: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை *இடம்: இராமாயம்மாள் மண்டபம், சத்தியமங்கலம் முதன்மைச் சாலை, கோபி *நிகழ்வில்: ஈட்டி கணேசனின் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சி – புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்சசி – குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்து *சிறப்பு விருந்தினர்கள்: முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில துணைப் பொதுச் செயலாளர்), அனிச்சம் கனிமொழி (ஈரோடு), மருத்துவர் வி.கோகிலாமணி (அவினாசி), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *நுழைவுக் கட்டணம்: ரூ.100.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *