‘‘கருத்துரிமைக்காக உடன் நிற்போம்’’ என்ற திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டிற்கு நன்றி!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி அம்மையார் கடிதம்!

மதிப்பிற்குரிய திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் தன் வரலாற்று நூலான ‘‘Belonging: A Journey of Love’’ புத்தகத்தில் இடம்பெற்ற சில கருத்துகளுக்காக, அந்த நூலை வெளியிடுவதில் ஏற்படுத்தப்பட்ட சிக்கல்களையும், அதைக் கண்டு தயங்காமல், அந்த நூலை வேறொரு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட செய்தியையும் அறிந்தோம். எப்போதும் இடர்களைக் கடந்து வெற்றி பெறக்கூடியவர் தாங்கள், இப்போதும் அப்படியே!

கருத்துரிமையைக் காக்க எப்போதும் திராவிடர் கழகம் உடன் நிற்கும். தங்களின் புத்தக வெளியீடு வெகு சிறப்பாக நடைபெறவும், வெகு மக்களிடம் அப் புத்தகம் சேரவும் எமது வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

இணைப்பு:

1.தங்கள் புத்தகம் தொடர்பான எமது அறிக்கை.

  1. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவமதிப்புத் தொடர்பான அறிக்கை

காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையார் எழுதிய தன் வரலாற்று ‘‘Belonging: A Journey of Love’’ புத்தகத்தில் உள்ள சில பகுதிகள் நீக்கப்படவேண்டும் என புத்தகப் பதிப்பாளர் வலியுறுத்திய நிலையில், தனது கருத்தினை வெளியிட தனக்குள்ள உரிமை யில் உறுதியாக நின்றமைக்குப் பாராட்டுத் தெரி வித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனுப்பிய கடிதத்திற்கு, நன்றி தெரிவித்து திருமதி சோனியா காந்தி அம்மையார், ஆங்கிலத்தில் அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:

சோனியா காந்தி எழுதிய கடிதம்!

‘‘அன்புள்ள திரு. வீரமணி அவர்களுக்கு,

7, செப்டம்பர் 2026 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கும், அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களுக்கும் நன்றி. எனது வரவிருக்கும் புத்தக வெளியீடு தொடர்பாக திராவிடர் கழகம் வெளிப்படுத்தியுள்ள அன்பான ஆதரவிற்கும், ஒற்றுமை உணர்விற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *