கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.9.2026

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது; மீனவச் சகோதரர்களின் போராட்டத்திற்கு தி.மு.கழகம் துணைநிற்கும்! – அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகளும் சந்திப்பை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த நிலத்திற்கு பதிலாக வேறு நிலத்தை அந்த நிறுவனத்திடம் இருந்து ஏன் பெற்றுக் கொள்ள கூடாது? என ஆலோசித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அயோத்தி ராமன் கோவில் உண்டியல் திருட்டு மோசடி 70 தடவை அல்ல; 105 முறை நடந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை.

* வாக்காளர் சரிபார்ப்பு குறித்து எஸ்.அய்.ஆர். நோட்டீசுக்கு பதில் தரும் வாக்காளர்களுக்கு அத்தாட்சி தர உத்தரவிட்டும், தர மறுக்கும் அதிகாரிகள்; மக்கள் கடும் அதிருப்தி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முறை, ஒரு பிராங்கன்ஸ்டீன் அரக்கன்’: டெல்லியில் 33.13 லட்சம் பேருக்கு அனுப்பப்பட்ட எஸ்.அய்.ஆர். அறிவிப்புகள் குறித்து காங்கிரஸ் விமர்சனம். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “METHOD OF DISENFRANCHISING INDIANS” (இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முறை) என்ற சொற்றொடரை செங்குத்தாகப் பதிவிட்டார்; இதில் ஒவ்வொரு சொல்லின் முதல் பெரிய எழுத்தையும் சேர்த்தால் “MODI” (மோடி) என்று வாசிக்கும் வகையில் அது அமைந்திருந்தது.

தி இந்து:

* சுற்றுச்சூழல் நாசம்: பிள்ளையார் சிலைகள் கரை ஒதுங்கின; டன் கணக்கிலான கழிவுகளை அகற்றும் பணியாளர்கள். சென்னை மாநகராட்சி) தரவுகளின்படி, செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களிலிருந்து 9,413 சிலைகள் உட்பட 92.965 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. சிலைகளைச் செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கரைவதற்கு சில நாட்கள் ஆகலாம் என்று விஞ்ஞானி ஆர். ராமசுப்பிரமணியன் தகவல்.

தி டெலிகிராப்:

* நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கிடைத்த மந்தமான வரவேற்பு; பாஜக கவலை. கவனமாக கட்டமைக்கப்பட்ட அவரது பிம்பத்தை இந்த ஆடம்பரக் காட்சிகள் வலுப்படுத்துவதற்கு பதிலாக சிதைத்திருக்கலாம் என்று ஆளும் தரப்பிலேயே ஒரு பகுதியினர் கவலை தெரிவி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண