கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.7.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு சட்டம், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டம் விலங்குகளை பலியிடு வதை முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர தடை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.எனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ‘பாடல் மற்றும் நடனம்’ மட்டும் இந்துத் திருமணம் ஆகாது; பதிவு செய்வது மட்டுமே அதைச் செல்லு படியாக்காது: குஜராத் உயர் நீதிமன்றம். திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாக முக்கியச் சடங்குகள் அவசியம்: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கமான சடங்குகள் நடந்தால் மட்டுமே அத்திருமணம் சட்டப்படிச் செல்லும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தி இந்து

* முதலமைச்சர் விஜய் மீது காவல்துறை வழக்கு பதிய அனுமதி கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம். முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார். திமுக எம்எல்ஏக்களை பதவி விலக வைக்க முதலமைச்சர் விஜய், வைகோ கூட்டுச்சதி. விஜய் – வைகோ இணைந்து கூட்டுச் சதி செய்ததை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

தி டெலிகிராப்

* யு.ஜி.சி. நெட் (UGC NET) ஆங்கிலத் தாளில் 67 கேள்விகள் மீண்டும் இடம் பெற்ற விவகாரம்: தேசிய தேர்வு முகமை மீது முன்னாள் துணைவேந்தர்களும் ஆசிரியர்களும் கடும் அதிருப்தி. இந்த ஆண்டு நடைபெற்ற தேசியத் தகுதித் தேர்வின் (NET) ஆங்கிலப் பாடத்தாளில் உள்ள 150 கேள்விகளில் 67 கேள்விகள், இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய வினாத்தாளில் உள்ள கேள்விகளையே ஒத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணி மற்றும் முனைவர் பட்டப் (PhD) படிப்பு ஆகியவற்றுக்கான ஒருவரின் தகுதியைத் தீர்மானிக்க இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *