பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

வல்லம் செப். 22- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டிற்கு முன் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரா த.கவிதா (தலைவர் முன்னாள் மாணவர்கள் சங்கம்) வரவேற் புரையாற்றினார்.

பல்கலைக்கழக துணைத் தலைவர் வீ.அன்புராஜ் உரை யாற்றும் போது, முதலாவதாக மரம் நடும் விழாவிற்கு தலைமை வகித்தார். ஒவ்வொரு செடிக்கும், மரத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. யார் வந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி இடத்தை ஒதுக்கிவிடுவோம். இன்று நாம் நட்டது நாவல் மரத்தை இதனுடைய பலன் நான்கு ஆண்டுகள் முடிவுற்ற பிறகு தான் கிடைக்கும். ஒவ்வொரு மரமும் உங்களுடைய பெயரைச் சொல்லும் என்றார். அசையும் சொத்து அசையாச் சொத்துகள் என்று வேறுபாட்டில் நீங்கள் எங்கள் அசையாச் சொத்துகளாக இருக்கிறீர்கள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டுவிட்டும் வந்துள்ளீர்கள். பலர் குடும்பத்துடனும் வந்துள் ளீர்கள். அவர்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முன்னாள் மாணவச் சங்கத் தினர் வழங்கிய ரூ.2,00,000 காசோலையை பல்கலைக்கழக வளர்ச்சி நிதியாகவும் குடிதண்ணீர் சுத்தகரிப்பான் ஒன்றினையும் துறைத் தலைவரிடம் துணைத் தலைவர் வழங்கினர்.

இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா உரையாற்றும் போது நீங்கள் குடும்ப உறுப்பினர் என்றும் 25 ஆண்டிற்கு பின்னர் இன்று சந்திக்கின்றீர்கள். இது ஒரு மற்றற்ற மகிழ்ச்சியான நாளாகும். நீங்கள் பயின்ற காலத்திற்கும் இப்போது பயிலும் மாணவர்களுக்கும் நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்திருக்கிறது. ஒரு பல்கலைக் கழகத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லுவது முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் தான்.

பல்கலைக்கழக பதிவாளர் பேரா முனைவர் பி.கே.சிறீ வித்யா உரையாற்றும் போது 25 ஆண்டிற்கும் பின்னோக்கி போன மாதிரி உள்ளது என்றும் 2007 ஆம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தகுதினை பெற்றது. இன்று 6000 த்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று கொண்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் ஒரு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னாள் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த வகுப் பாசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நன்றியுரையினை முன்னாள் மாணவி கிருஷ்ணகுமாரி வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *