திருச்சி, ஆக. 2- திருச்சி – பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் சமூக விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் “இளைய சமுதாயமே தடம் மாறாதே தடுமாறாதே” என்னும் சிந்தனையோடு மிகச் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மொழி வாழ்த்துடன் இனிதே நடைபெற்றது.
விழாவிற்குப் பள்ளியின் முதல்வர் முனைவர் க. வனிதா முன்னிலை வகித்துச் சிறப்பித்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாகப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் ஏ.ஆர். திலகவதி அனைவரையும் அன்போடு வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து விருந்தினர்களைக் கவுரவித்தலும், போதைப் பொருள் தடுப்புக் குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் நடை பெற்றன.
இவ்விழாவில் மாணவ – மாணவிகளின் திறமைகளை வெளிப் படுத்தும் விதமாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன:
மாணவி எம். சுரேகா (10-ஆம் வகுப்பு) – சிறப்பு உரை
மாணவி எஸ். சிறீஆருஷி (11-ஆம் வகுப்பு) – கவிதை வாசிப்பு
மாணவன் எக்ஸ். ஆல்வின் ஜெரான் (12-ஆம் வகுப்பு) – சிறப்பு உரை
இவ்விழாவில் சிறப்பு ரையாற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்:
சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு, திருச்சி.
கென்னடி, உதவி காவல் ஆணையர், கலைஞர் கருணாநிதி நகர் கோட்டம், திருச்சி.
ஆர்.பரிமளா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், மணிகண்டம் வட்டாரம், திருச்சி.
விஜயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவ லர், மாவட்ட சமூக நல அலுவலகம், திருச்சி.
பாரதி மோகன், திட்ட ஒருங்கிணைப்பாளர், காஜாமலை மகளிர் சங்கம் – போதை மீட்பு மய்யம், திருச்சி.
அருள் ராபர்ட், பாலின வல்லுநர், மாவட்ட சமூக நல அலுவலகம், திருச்சி.
வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மாண வர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கீழ்க்கண்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது:
“நான் போதைப் பொருளை எந்த நிலை யிலும் பயன்படுத்த மாட் டேன். மற்றவர்களையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். என்னையும், என் நண்பர்களையும் பாது காப்பேன். பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்.”
நிகழ்ச்சியின் இறுதியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு அலுவலர் பிரியதர்ஷினி நன்றியுரை வழங்க, இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் இளங்கலை சமூகவியல் ஆசிரியரும், போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பா.பாபி பிரசன்னா மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான முதுகலை தமிழாசிரியர் நா.அருண் பிரசாத் ஆகியோர் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர். நிகழ்வில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
