ஒன்றிய அரசின் முடிவுகளால் ஆரவல்லி மலைத்தொடர் ‘மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு’ உள்ளாகியுள்ளது ஜெய்ராம் ரமேஷ் சாடல்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெங்களூரு, செப்.22–- ஒன்றிய அரசின் மறுவரையறை முடிவுகளால் ஆரவல்லி மலைத்தொடர் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுரங்கத் தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் பிற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு ஆரவல்லி மலைத்தொடரை மறுவரையறை செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளால் அது மிகக் கடுமையான ஆபத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள உயர்மட்டக் குழு (நவம்பர் 30, 2026 கெடு விதிக்கப்பட்டுள்ளது) ஒன்றிய அரசின் இந்த மறுவரையறை முடிவுகளை நிராகரிக்கும் என நம்புவதாகவும், இல்லையெனில் மேலும் பல சுற்றுச்சூழல் படுகொலைகள் நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சுரங்கத் தொழிலின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த பிடிஅய் (PTI) செய்தி நிறுவனத்தின் தொடர் அறிக்கைகளைத் தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. ஆரவல்லி மலைத்தொடர் இயற்கை விரிசல்கள் மூலம் வடமேற்கு இந்தியாவில் நிலத்தடி நீர் மறுஊடுருவலுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *