இந்திய அரசு எடுக்கவிருக்கும் ‘சென்சசில்’ பேக்வேர்டு கிளாஸ் என்பதில் ஜாதியை நீக்கி வகுப்பு என்ற சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது!
இதை முறியடிக்கவே இது முதல் கட்டப் போராட்டம்!
இந்தியா முழுவதும் போராடி சமூகநீதியைக் காப்போம்!!
இதை முறியடிக்கவே இது முதல் கட்டப் போராட்டம்!
இந்தியா முழுவதும் போராடி சமூகநீதியைக் காப்போம்!!
- இந்திய அரசு எடுக்கவிருக்கும் ‘சென்சசில்’ பேக்வேர்டு கிளாஸ் என்பதில் ஜாதியை நீக்கி வகுப்பு என்ற சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது! இதை முறியடிக்கவே இது முதல் கட்டப் போராட்டம்! இந்தியா முழுவதும் போராடி சமூகநீதியைக் காப்போம்!!
- ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
- தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
- கோவிட் என்ற ஒரு காரணத்தைக் காட்டி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு தள்ளி வைத்தது!
- ஜாதியின் காரணமாகத்தான்….
- இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற ஒரு சொல்லாக்கத்தை உருவாக்கினார்கள்!
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய 105 ஆவது சட்டத் திருத்தம்!
- அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவோ என்னவோ…
- மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமையைத் தடுக்கிறார்கள்!
- Quantifiable Data என்ற ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள்!
- 2018 ஆம் ஆண்டு – 102 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
- பல ஜாதிகளுடைய தொகுப்பிற்குப் பொது பெயர்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்!
- ஜாதியைத் தாண்டி இருக்க முடியாது, யாராக இருந்தாலும்…
- மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, பின்பற்றப்படவேண்டியவை!
- இந்தியா முழுவதும் இந்த எதிர்ப்பு இயக்கம் பரவவேண்டும்!
- ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின் சூழ்ச்சித் திட்டமாகும்!
- தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
- ஜாதிகளுடைய தொகுப்புதான் வகுப்பு!
சென்னை, செப்.11 இந்திய அரசு எடுக்கவிருக்கும் ‘சென்சசில்’ பேக்வேர்டு கிளாஸ் என்பதில் ஜாதியை நீக்கி வகுப்பு என்ற சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை முறியடிக்கவே இது முதல் கட்டப் போராட்டம் என்றும், இந்தியா முழுவதும் போராடி சமூகநீதியைக் காப்போம் என்றும் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கூறினார்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
இன்று (11.9.2026) முற்பகல் 11.30 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகே திராவிடர் கழகம் சார்பில், ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது 10 ஆண்டு களுக்கு ஒருமுறை, அரசியலமைப்புச் சட்டத்தினுடைய கட்டளைப்படி நடைபெறவேண்டிய ஒன்றாகும்.
சென்சஸ் என்று அழைக்கப்படக் கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது என்று சொன்னாலும், அந்த முழு உரிமை, அதற்குரிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டும்தான் உண்டு; மாநில அரசுகளுக்குக் கிடையாது. மாநில அரசுகள் ஒத்துழைக்கவேண்டும் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தினுடைய விதி.
கோவிட் என்ற ஒரு காரணத்தைக் காட்டி, பி.ஜே.பி.,
ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு தள்ளி வைத்தது!
ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு தள்ளி வைத்தது!
அதன்படி, 10 ஆண்டுகள் நடந்து வந்த கணக்கெ டுப்பு என்பது, கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. கோவிட் என்ற ஒரு காரணத்தைக் காட்டி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு அதனைக் காரணம் காட்டி, தள்ளி வைத்தது.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மத்தியிலே பஞ்சாயத்து உள்பட இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதை எவ்வளவுக்கெவ்வளவு ஆர்.எஸ்.எஸ். அரசு தவிர்க்க முடியுமோ அல்லது தள்ளிப்போட முடியுமோ, அதைச் செய்யவேண்டும் என்கிற உள்நோக்கத்தோடுதான் அவர்கள் முழுக்க முழுக்க இந்த வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள்.
கோவிட் தொற்றை ஒரு காரணமாகச் சொன்னார்கள். கோவிட் நேரத்தில், தேர்தல்கூட நடந்திருக்கிறது. ஆனால், வீட்டிற்கு வீடு சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்று அவர்கள் காரணம் சொன்னார்கள்.
கோவிட் முடிந்து பல ஆண்டுகள் ஆன நிலை யிலும்கூட, இப்போதுதான் மீண்டும் அதைத் தொடங்குவோம் என்று மக்கள் கொடுத்த மிகப்பெரிய அழுத்தம் காரணமாகத் தொடங்கினார்கள்.
ஆனால், அதில் மிக முக்கியமானது, மக்கள் தொகை இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டும்.
ஜாதியின் காரணமாகத்தான்….
ஒன்று, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வகுப்பு என்ற பெயராலே, ஜாதியைத்தான் அறிந்திருக்கின்றனர். அந்த ஜாதிகள் என்று சொல்லும்போது, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களான மலைவாழ் மக்கள் அதுபோலவே, மிக முக்கியமாக இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள், மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இவர்கள் அத்தனைப் பேரும் எப்படி இங்கே உருவானவர்கள் என்றால், ஜாதியின் காரணமாகத்தான், அந்தப் பிரிவிற்கு அவர்கள் ஆளானார்கள்.
எனவே, அடையாளம் காட்டப்படும்போது, ஜாதி அடிப்படையில்தான், இட ஒதுக்கீடு என்பது மிகத் தெளிவாக இருக்கக் கூடியது.
ஆனால், வெளிப்படையாக ஜாதி என்று சொல்லா மல், அரசியலமைப்புச் சட்டத்தில், அதை எப்படி அடையாளம் காணுவது என்று சொல்லும்போது, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் Socially and Educationally Backward Class என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த வார்த்தையைப் போட்டார்கள்.
இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற ஒரு சொல்லாக்கத்தை உருவாக்கினார்கள்!
Backward Class என்பதில், ஒடுக்கப்பட்ட, தீண்டா மைக் கொடுமைக்கு உள்ளான மக்களைக் குறிக்க, ெஷட்யூல்டு காஸ்ட் என்பதற்குப் பட்டியல் இருக்கிறது; ெஷட்யூல்டு ட்ரைப்ஸ் என்பதற்குப் பட்டியல் இருக்கிறது. ஒட்டுமொத்தமான Backward Class என்பதிலிருந்து, ெஷட்யூல்டு காஸ்ட், ெஷட்யூல்டு ட்ரைப்ஸ் அல்லாதவர்களைக் குறிக்கவே Other Backward Class – இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற ஒரு சொல்லாக்கத்தை உருவாக்கினார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய
105 ஆவது சட்டத் திருத்தம்!
105 ஆவது சட்டத் திருத்தம்!
ஆனால், 105 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வந்த பிறகு, அதற்குரிய அவசியமே இல்லாமல் போய், மிகத் தெளிவாக, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வாய்ப்புகள் என்பதைத் தெளிவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய 105 ஆவது சட்டத் திருத்தம் தெளிவாக்கியிருக்கிறது.
அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவோ என்னவோ…
இவ்வளவு தெளிவாக இருக்கின்ற ஒரு செய்தியில், வேண்டுமென்றே, திட்டமிட்டே, ஆர்.எஸ்.எஸ்., குழப்பத்தை உண்டாக்கவேண்டும் என்பதற்காக, பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஒரு முயற்சியை எடுத்து, அதுவரையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்ளமாட்டோம், ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று சொன்ன மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். அரசு, பீகார் தேர்தலில் அதைச் சொன்னால்தான் வெற்றி பெற முடியும் என்ற அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவோ என்னவோ, ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.
இப்போது அதன்படி நடக்கவேண்டிய ஓர் அவசி யத்திற்கு வரவேண்டிய ஒரு காலகட்டத்தில், இப்போது அதிலிருந்து பின்வாங்குகிறார்கள்.
அதுமட்டுமல்ல, எஸ்.சி, எஸ்.டி, என்பது அப்படியே இருக்கட்டும். ஆனால், ஓபிசி என்பதை Other Backward Class என்று சொல்வதற்கு அவசியமே இல்லை.
Backward Class, Most Backward Class என்பது மிகத் தெளிவாக இருக்கிறது.
மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமையைத் தடுக்கிறார்கள்!
இப்போது ஒரு புதுக் குழப்பத்தை உண்டாக்கி வரு கிறார்கள். அதன்மூலமாக, மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையைத் தடுக்கிறார்கள். எப்படித் தடுக்கிறார்கள் என்று சொன்னால், இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்திற்கு வரவேண்டும்; அல்லது போதிய பிரதிநிதித்துவம் – Adequate Representation என்று வரவேண்டும் என்ற நிலை வருகிறபோது, உடனே மாநில அரசுகள், மக்களுடைய தீர்ப்பிற்கு, மக்கள் கொடுத்த வாக்குகளுக்கு இணங்க சட்டங்களைச் செய்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீட்டை செய்கின்ற நேரத்தில், நீதிமன்றத்திற்கு உயர்ஜாதிக்காரர்கள் செல்லுகிறார்கள் திட்டமிட்டே!
Quantifiable Data என்ற ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள்!
உடனே அங்கு உயர்ஜாதிக்கார ஆதிக்கம் நிறைந்த நீதிபதிகள் என்ன சொல்லுகிறார்கள் என்று சொன்னால், இதற்கு ஆதாரம் என்ன? நீங்கள் மக்கள் தொகையில் எவ்வளவு இருக்கிறீர்கள்? Quantifiable Data என்ற ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அதாவது, கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விவரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
அந்தக் கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விவரங்களை யார் கொடுக்கவேண்டும்? ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு உரிமை உண்டா? என்றால், கிடையாது. அவர்கள் எடுக்கலாம். எடுத்தால், அதற்குப் பெயர் ‘சர்வே’ என்று பெயரே தவிர, உச்சநீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு புள்ளி விவரமாக அதைக் கருத முடியாது என்று தெளிவாக்கி விட்டார்கள்.
எனவேதான், தெளிவாக இப்போது ஜாதி அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இதில் ஒன்றே ஒன்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம், சட்டப் பிரச்சினை இது. விளங்கிக் கொள்வதில் கொஞ்சம் தயக்கம் இருக்கலாம். அதனால், கவனமாகப் பார்க்க வேண்டும்.
102 ஆவது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 342A என்பதில், Socially and Educationally Backward Class என்று ஒரு புதிய திருப்பத்தை அரசியலமைப்புச் சட்டம் – இதே ஒன்றிய அரசு செய்திருக்கிறது.
காரணம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் தேவை அவர்களுக்கு. அந்த நேரத்தில், இதைச் செய்தார்கள்.
2018 ஆம் ஆண்டு – 102 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
அதன் காரணமாகத்தான், 102 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதை 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றினார்கள். அதில், மிகத் தெளிவாகவே எடுத்துச் சொன்னார்கள் Socially and Educationally Backward Class என்று.
பிரச்சினைகள் வரும்போது, சமூக ரீதியாகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும்தான், அரசியலிலே எந்தக் குறிப்பெடுத்தாலும், அந்தக் குறிப்பிலே இந்த மக்களைப் பயன்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள்.
உடனே இப்போது, ஒரு குயுக்தியாக, இதுவரை இல்லாத ஒரு சூழ்ச்சியைக் கையாளுகிறார்கள். இதைத்தான், ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். மிகப்பெரிய ஆபத்து – அடியில் உள்ள வேரை வெட்டுவதுபோன்று ஒன்றைச் சொல்லுகிறார்கள். வகுப்பு (Class) என்ற வார்த்தைதான் இருக்கிறது; ஜாதி (Caste) என்ற வார்த்தை இல்லை என்று, போலித்தனமாக, யோக்கியப் பொறுப்பில்லாமல், அறிவு நாணயக் கேடாக இதைச் செய்கிறார்கள்.
இதைப்பற்றி மிகத் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் – வகுப்புவாரி உரிமை செல்லவேண்டும் என்பதற்காக பெரியார் போராடி, அதன் காரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுத்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராகவும், நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோதும், அவர் அதே நாடாளுமன்றத்தில் தெளிவாக ஒன்றைச் சொன்னார்கள்.
பல ஜாதிகளுடைய தொகுப்பிற்குப் பொது பெயர்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்!
Backward Class என்பது இருக்கிறதே, ‘‘Nothing but a Bundle of Castes’’ – பல ஜாதிகளுடைய தொகுப்பிற்குப் பொது பெயர்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்று.
எனவே, வகுப்புகள் வேறு அல்ல; ஜாதிகள் வேறு அல்ல. ஜாதிகளுடைய தொகுப்புதான் வகுப்பு என்ற அரசியலமைப்புச் சட்டத்திலே அமைக்கப்பட்டு இருக்கிறது என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் இது ஒப்புக்கொள்ளப்பட்டுத்தான், கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று சொன்னதற்கு மாற்றாக, Socially and Educationally Backward Class People என்று சொல்லி, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உருவாக்கப்பட்டது.
சமூக ரீதி என்றால் என்ன?
ஜாதியைத் தாண்டி இருக்க முடியாது,
யாராக இருந்தாலும்…
யாராக இருந்தாலும்…
இந்தியாவில், இந்து மதம் என்று சொல்லக்கூடிய மதத்தில் பிறந்தால், ஜாதியைத் தாண்டி இருக்க முடியாது. யாராக இருந்தாலும், இந்து மதம் என்று சொல்லும்போது, ஜாதியோடு பிறக்கிறார்கள்; ஜாதியோடு வாழ்கிறார்கள்; ஜாதியோடு மறைகிறார்கள். சுடுகாட்டில்கூட ஜாதி முன்னால் நிற்கிறது என்ற சூழ்நிலை இருக்கும்போது, ஓர் நிரந்தரமான அடையாளம் – மாற்றப்பட முடியாத ஓர் அடையாளம் இருக்கவேண்டுமானால், புள்ளி விவரம் – சமூக ரீதியானது என்று சொன்னால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு Socially என்ற வார்த்தைக்கு அது அர்த்தம்.
அதேபோல, மனு தர்ம ரீதியாகக் கல்வி மறுக்கப்பட்டதினால், கல்வி அளவுகோலும் இணைக்கப்பட்டது.
எனவேதான், Class என்பதற்குப் பதிலாக, வகுப்பு என்ற அர்த்தத்தில், இந்தச் சூழ்ச்சியைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, மீண்டும் தெளிவாக அரசியலமைப்புச் சட்டம் வகுத்திருக்கின்ற படி, ஜாதி, கல்வி அடிப்படையில்தான், கணக்கெடுப்பு நடத்தவேண்டும். இதில், அவரவர் கருத்தைக் கேட்கவேண்டிய அவசியமில்லை.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, பின்பற்றப்படவேண்டியவை!
ஒன்றியத்தில், ஒரு பட்டியல் இருக்கிறது; மாநிலங்களில் ஜாதிப் பட்டியல் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இருக்கிறது. அதைத்தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, பின்பற்றப்படவேண்டும் என்பதைத்தான் நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம்.
இது அரசியலமைப்புச் சட்டம் வகுத்த விதி மட்டுமல்ல; இதை மீறினால், அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் மீறுகிறார்கள் என்று அர்த்தம்.
இந்தியா முழுவதும் இந்த எதிர்ப்பு இயக்கம் பரவவேண்டும்!
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக இருக்கின்றன. ஆகவே, இவற்றையெல்லாம் தாண்டி, அவர்களின் குயுக்தி வெற்றி பெறக்கூடாது! இந்தியா முழுவதும் இந்த எதிர்ப்பு இயக்கம் பரவவேண்டும்.
இன்றைக்கு நாங்கள் இதனைத் தொடங்கி வைக்கிறோம். நாளைக்கு இதே இடத்தில், அமைப்பு ரீதியாக இருக்கக்கூடியவர்கள் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள். செப்டம்பர் 17 ஆம் தேதி காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு போராட்டத்தை நடத்தவிருக்கிறார்கள். இது ஒரு தொடக்கம் – நாடு முழுவதும் இது வரும்.
ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின்
சூழ்ச்சித் திட்டமாகும்!
சூழ்ச்சித் திட்டமாகும்!
காரணம், இது கட்சிப் பிரச்சினையோ, ஜாதிப் பிரச்சினையோ அல்ல. கோடான கோடி மக்களுக்குக் கிடைத்திருக்கின்ற சமூகநீதிக்கான வாய்ப்பைத் தட்டிப் பறிக்கக் கூடிய ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின் ஒரு சூழ்ச்சித் திட்டமாகும். குலக்கல்வித் திட்டம்போல, நீட் தேர்வு போன்றதே இது!
ஆகவேதான், இதை ஒழித்துக் கட்டவேண்டும். ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற உணர்வு, ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.
இந்த எதிர்ப்பு இமாலய எதிர்ப்பாகக் கிளம்பவேண்டும். முளைத்திருப்பதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பதுதான் இந்தப் போராட்டத்தினுடைய நோக்கமாகும்.
ஆகவேதான், இறுதிவரை போராடுவோம் – வெற்றி பெறும்வரை போராடுவோம்!
ஜாதிவாரி்க் கணக்கெடுப்பு என்பதில் தெளிவாக இருக்கிறது. இதை ஒன்றிய அரசு முன்பு ஒப்புக்கொண்டதிலிருந்து பின்வாங்கக் கூடாது. அதுதான் நேர்மை, அதுதான் அரசியலமைப்புச் சட்டம் என்பதைச் சொல்லித்தான் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. மற்ற அமைப்புகளும் போராட்டங்களை நடத்தவிருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
இதனை வற்புறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பதையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மறந்துவிடக்கூடாது.
எனவே, தமிழ்நாடுதான் சமூகநீதி மண் – பெரியார் மண். எனவேதான், முதல் குரல்!
தமிழ்நாட்டில் இருந்துதான் முதல் உரிமை முழக்கம் வந்திருக்கின்றது என்பதற்கு அடையாளம். ஆகவேதான், இதனை வலியுறுத்தி, தமிழ்நாடு இன்றைக்குத் தொடங்குகிறது. இந்தியா முழுவதும் இது நடக்கும்.
ஜாதிகளுடைய தொகுப்புதான் வகுப்பு!
சென்சஸ் என்ற பெயராலே, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயராலே, குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. வகுப்பு வேறு அல்ல; ஜாதி வேறு அல்ல. ஜாதிகளுடைய தொகுப்புதான் வகுப்பு என்ற பெயராலே, அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
