டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*இடைத்தேர்தல் வேட்பாளர்கள், திமுக அறிவிப்பு: மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன், அரியலூர் தொகுதிக்கு சுகன்யா ஆகியோரை திமுக வேட்பாளர் களாக அறிவித்துள்ளது.
*நீதித்துறை விமர்சனம்:“நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல; ஆக்கப்பூர்வமான விமர்சனம் ஜனநாயகத்தில் அவசியம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ‘என்.சி.இ.ஆர்.டி. பாடநூல் சர்ச்சை’ தொடர்பான வழக்கின் நடவடிக்கைகளையும் உச்சநீதி மன்றம் முடித்து வைத்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* விஜய்யின் பேச்சுக்கு எதிராக திமுக செப். 12 அன்று மாநிலம் தழுவிய போராட்டம்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் மற்றும் கலைஞர் குறித்து விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்துகிறது. ஆட்சியின் குறைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விஜய் தரம் தாழ்ந்த பேச்சில் ஈடுபடுவதாக திமுக குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* மல்லிகார்ஜூன கார்கே பேரணிக்கு பிறகு ஹல்த்வானி ராம்லீலா மைதானத்தில் நடத்தப்பட்ட ‘சுத்திகரிப்பு’ நிகழ்வு இந்தியச் சட்டப்படி நிச்சயமாக குற்றம்; அது கைது செய்யக்கூடிய குற்றம் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர், தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சட்டத்தின்படி, காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அவர்களும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக கருதப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
– குடந்தை கருணா
