செப்.12இல் முதலமைச்சர் விஜய்யின் முதிர்ச்சியற்ற பேச்சைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 10– முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து செப்.12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: திரையுலகக் கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து, குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியை தவெக கைப்பற்றியது.

திமுக கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளை கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று, அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகி இருக்கிறார் நடிகர் விஜய்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநிலத்தில் கொலை-கொள்ளை, போதைப் பொருள் நடமாட்டம் – பாலியல் வன்முறைகள் அதிகமாகி விட்டன.

பல்வேறு குற்றச்செயல்களில் தவெக நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். ‘தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்’ என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள்.

இதிலிருந்து திசை திருப்பு வதற்காக ‘டயலாக் சூட்டிங்’ மேடையாக சட்டப்பேரவையை முதலமைச்சர் மாற்றிவிட்டார். கலைஞர், முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் ஆகியோரை கொச்சைப்படுத்தி சட்டப்பேரவையில் விஜய் பேசிய பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. இதன்மூலமாக சட்டப்பேரவையின் மாண்பு, மரபு, வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கின்றன.

ஆட்சியின் தோல்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார்.

இவரது பேச்சைக் கண்டிக்கும் வகையில், திமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் செப்.12ஆம் தேதி, மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *