பிற்படுத்தப்பட்டோருக்கு (Backward Class) ஒன்றிய அரசில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இருந்து வருகிறது!
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடும் கல்வி, வேலை வாய்ப்பில் இருந்து வருகிறது.
இவை ஒன்றும் சாதாரணமாக வந்துவிடவில்லை. கடும் முயற்சியாலும், உழைப்பாலும், போராட்டங்களாலும், சிறை வாசங்களாலும் கிடைக்கப் பெற்றவை.
பெரும்பாலான மக்களான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நீண்ட காலம் ஒன்றிய அரசில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
போராடி, போராடிப் பெற்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பார்ப்பன பாசிச பா.ஜ.க. ஆட்சி திட்டமிட்டுள்ளது – கிளாஸ் என்பது ஜாதியல்ல – வகுப்பு என்று திரிபுவாதம் செய்கிறது.
இவ்வளவுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மையினர் – அவர்களின் உரிமையில் கை வைக்கத் துடிக்கிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு என்றால், பெரும்பான்மை மக்கள் மாக்கடலாய்க் கொதித்து எழ வேண்டாமா?
ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் உரிமையைப் பறிப்பது – எத்தகைய விபரீதம்!
விழிப்புணர்வு பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து எங்கே வரப் போகிறது என்ற அலட்சியம்தானே!
சமூகநீதியில் எப்பொழுதும் முன் கை நீட்டி, போர்க்களம் காணும் தமிழ்நாடுதான் – திராவிடர் கழகம்தான் – வரவிருக்கும் பேராபத்தைச் சுட்டிக்காட்டி நாளை (11.9.2026) களம் காண்கிறது; தலைநகரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் வெடித்துக் கிளம்புகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சமூகநீதி உரிமை வரலாற்றில் இது மிகமிக முக்கியமானது!
அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் அயர்ந்தால், தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள், எச்சரிக்கை! எச்சரிக்கை!!
இட ஒதுக்கீட்டை ஒழிப்பதுதானே ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை. அதிகாரம் கையில் இருக்கும்பொழுது சமூகநீதிக்குச் சமாதி கட்டத் திட்டமிட்டு விட்டனர்.
இந்த ஆபத்து, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அகில இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் தலையில் விழும் இடி! இடி!!
எழுச்சிக் கொள்வீர்! நாளைக்கு திராவிடர் கழகம் நடத்தப்படவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் – இட ஒதுக்கீடு ஒழிப்பு சதித் திட்டத்தை ஆயிரம் அடியில் ஆழப் புதைக்கட்டும், புதைக்கட்டும்!
கட்சிகளைக் கடந்து ஒடுக்கப்பட்டோரே ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!!
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
