ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் ‘ஆசிரியர் தின விழா’ கொண்டாட்டம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஜெயங்கொண்டம், செப்.9- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் நாள் விழா முதல்வர் தலைமையில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சா.இளங்கோவன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இவ்விழாவில் மாணவர்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர்கள் ஆற்றும் பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர். மேலும், நடனம் நாடகம், பாடல், கவிதை ஆசிரியர் களைப் பற்றி உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் ஆசிரியர்களை மகிழ்வித்தனர்.

02.09.2026 அன்று பெரியார் கல்விக் குழுமத்தின் சார்பாக ஆசிரியர்களுக்கு நல்லா சிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியை கே.கிரிஜாவுக்கும் விருது வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் மற்றும் பெரியார் பள்ளியின் முதல்வர் அவர்களும் அவ்விருதினை ஆசிரியர் நாளன்று (5.9.2026) இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் முன்னிலையில் வழங்கி சிறப்பித்தார்.

விருது பெற்ற ஆசிரியை நன்றியுரையில் தன்னுடைய ஆசிரியர்களைத் தரம் உயர்த்தி அழகு பார்ப்பதில் பெரியார் கல்வி நிறுவனம் தன்னிகரில்லாமல் விளங்குகிறது என்பதை பெருமிதத் துடன் கூறினார்.

இந்த விருது தமது பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் மட்டு மல்லாமல், மேலும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கான ஊக்கமாகவும், பொறுப்பாகவும் கருதுவதாக கூறினார்.

கல்விப் பணியை சிறப்பாக ஆற்றுவதற்கு வாய்ப்பளித்த பெரியார் கல்வி நிறுவனத்திற்கும் தன்னை வழி நடத்திய பெரியார் பள்ளியின் முதல்வர் அவர்களுக்கும் இருபால் ஆசிரியர்களுக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *