திருச்சி, ஆக. 22- 6ஆம் வகுப்பு மாணவி சி.சிஃபா 4ஆவது தென்னிந்திய தற்காப்புக் கலை சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கமும் சான்றிதழும் பெற்றார்.
8ஆம் வகுப்பு மாணவி எஸ். நிரஞ்சனா 6ஆவது மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்குப்பெற்று இரட்டைக் கொம்பில் முதல் இடமும், ஒற்றைக் கொம்பில் இரண்டாம் இடமும் பெற்று கோப்பையுைம் சான்றிதழையும் வென்றார்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமை யாசிரியை மற்றும் ஆசிரி யர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
