மருத்துவர்களைத் தாக்குகிறவர்கள் சுதந்திரமாக நடமாடத் தகுதியற்றவர்கள்: உச்ச நீதிமன்றம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி செப். 08- தானே மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சையைத் தாமதப்படுத்துவதாக கூறி கடந்த ஜூலை மாதம் சிவசேனா கட்சியின் கவுன்சிலர் ரமேஷ் மத்ரேவு தலைமையிலான கும்பல் மருத்துவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ரமேஷ் மத்ரேவுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து உயர்நீதிமன்றமும் இந்த உத்தரவில் உறுதி செய்ததுடன், விசாரணையை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று பேருக்கும் பிணை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த பிணை நிபந்தனைகளுக்கு எதிராக ரமேஷ் மத்ரே தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று (7.9.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், ‘‘மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் மீதான தாக்குதல் நிகழ்வ கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. குறிப்பாக மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குவதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எதிர்மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்று அறிவிக்கை பிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *