உணவின் பன்முகத்தன்மையை உலக அரங்கில் மறைத்த ஒன்றிய அரசு, உணவிலும் தேசியத்தைத் திணிப்பதா?

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.14 தலைநகர் டில்லியில் 2 நாட்களாக நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் உலக விருந்தினர்களுக்கு  மரக்கறி உணவே வழகப்பட்டது. பொதுவாக இந்தியாவில் 99 விழுக்காடு மக்கள் இறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். உலக அரங்கில் இந்தியாவில் மரக்கறி  மிகவும் புகழ்பெற்றவைகள், அதில் பிரியாணி மற்றும் இறைச்சியை கூழாக்கி  எண்ணை கலக்காமல் சுட்டுச்சாப்பிடும் கபாப் போன்றவை மிகவும் புகழ்வாய்ந்தவை, இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மோடி அரசு அனைவருக் கும் மரக்கறி உணவை வழங்கியுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் வருகைதந்த அனைவருமே இறைச்சி உணவுப் பிரியர்கள்  பிரேசில் தென் ஆப் பிரிக்கா மற்றும் ரஷ்யா இறைச்சி உணவு ஏற்றுமதியில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் நாடுகள். இப்படி உள்ள நிலையில் விருந்தினர்களுக்கு இந்தியாவில் [99 விழுக்காடு மக்கள் உண்ணும் இறைச்சி உணவை அறிமுகப் படுத்தாமல் அவர்களுக்கு மரக்கறி உணவை படைத்து இந்தியாவின் சுவையை உலகிற்கு மறைத்துவிட்டனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:

தகவலுக்காக 80 சதவீத இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள். இந்தியாவின் அசைவ உணவு மிகவும் சுவையானது. எனது சகோதரியின் சோலே பட்டுரே அப்படித்தான். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பிரிக்ஸ் நாட்டு தலைவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுப்பட்டியலிலும், காங்கிரஸ் அரசியல் செய்வதை என்னால் நம்ப முடியவில்லை. பல்வேறு பிராந்திய மரபுகளைக் கொண்ட சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த இந்திய மரக்கறி உணவுகளை நமது விருந்தினர்கள் மிகவும் ரசித்து சாப்பிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்

உண்மைக்குப் புறம்பாக பேசிய
ஒன்றிய அமைச்சர்

உண்மை என்னவென்றால் பெரும் பாலான விருந்தினர்கள் இந்திய வகை உணவை விரும்பவில்லை காரணம் பாரம்பரிய உணவு என்ற பெயரில் மிகவும் கடிணத்தன்மை வாய்ந்த சிறுதானிய வகைகளால் செய்யப் பட்டவை இவை புதிதாக உண்பவர் களுக்கு உடல் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே பல தலைவர்கள் இந்திய வகை உணவை எடுத்துக்கொள்ளவே இல்லை.

மீன், இறைச்சி உள்ளிட்டவை எப்போதும் அவர்கள் சாப்பிடும் உணவு அவ்வகை உணவு இருந்தால் பெயரளவிற்கவது சுவைத்துப் பார்த் திருப்பார்கள். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் இறைச்சி வகை உணவும் மரக்கறி உணவும் வைக்கப்பட்டிருந்தது,  அப்போது விருந்தினர்கள் அனைவரும் மரக்கறி உணவைத் தவிர்த்து இறைச்சி வகை உணவை எடுத்துக்கொண்டனர். இதனால் இம்முறை அவர்களை மரக்கறி உணவை மட்டுமே எடுத்துகொள்ள நிர்பந்தம் செய்யும் வகையில் நடந்து கொண்டது ஒன்றிய பாஜக அரசு

விருந்தினர்களுக்கு வலிந்து தங்கள் உணவு முறையை திணிக்கும் போக்கை கையாண்டு இந்தியாவின் பல சுவைமிகுந்த இறைச்சி வகை உணவு உலக அரங்கில் செல்வதைத் தடுத்துவிட்டது.

இது போன்ற மாநாடுகளில் வழங்கப்படும் உணவு வகைகள் விரை வில் உலக அரங்கில் புகழ்பெரும் ஆனால் அந்த வாய்ப்பை மோடி அரசின் மதவாதப் போக்கால் கை நழுவிப் போனது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *