ரஷ்ய வான்வெளியை தவிர்க்க ஜெலென்ஸ்கி எச்சரிக்கை! ‘அரச பயங்கரவாதம்’ என புதின் பதிலடி!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மாஸ்கோ, செப். 3- ரஷ்ய வான்வெளிப் பகுதியை அனைத்து பன்னாட்டு விமான நிறுவனங்களும் தவிர்க்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனின் இந்த அறிவிப்பு “அரச பயங்கரவாதம்” என்று சாடியுள்ளார்.
ரஷ்யாவுக்குள் உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், ரஷ்ய வான்வெளிப் பகுதி முழுவதும் விமானங்கள் பறப்பதற்கு பெரும் அபாயகரமான மண்டலமாக மாறி வருகிறது. இதனால் ரஷ்ய வான்வெளியைப் பயன் படுத்தும் விமானங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பை கருதி அந்த வான்வெளியை தவிர்க்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “பொதுமக்களின் விமான போக்குவரத்தை அச்சுறுத்தும் வகையில் பேசுவது அரச பயங்கர வாதத்தின் வெளிப்பாடு” என்று சாடியுள்ளார்.
மேலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு ரஷ்யா ஒருபோதும் பணியாது என்றும், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித் துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ட்ரோன் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்த இந்த மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *