பஞ்சாப் மாநில அரசு மதப்பணிகளுக்கு மக்கள் பணத்தை வீணடிப்பதைத் நிறுத்த வேண்டும்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பஞ்சாபைச் சேர்ந்த தர்க்கசீல் சொசைட்டி என்ற பகுத்தறிவாளர் அமைப்பு வலியுறுத்தல்!

பர்னாலா, செப்.2 முதலமைச்சரின் ‘தீர்த்த யாத்திரைத் திட்டம்’ உள்பட குறிப்பிட்ட மதத் தலங்கள் மற்றும் மதச் சடங்குகளுக்காக, கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணத்தைச் சட்ட விரோதமாகச் செலவிடுவதை உடன டியாகத் தடுக்க வேண்டும் என்று பஞ்சாப் தர்க்கசீல் சொசைட்டியின் மாநிலக் குழு, வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சொசைட்டியின் மாநிலக் குழுத் தலைவர்கள் மாஸ்டர் ராஜிந்தர் பஹோட், ஹேம் ராஜ் ஸ்டென்னர், ராஜ்பால் சிங், ராம் ஸ்வரூப் லேக்வாலி மற்றும் சுமித் அமிர்தசர் ஆகியோர் கூறியதாவது:

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. எனவே, பஞ்சாப் அரசு உட்பட எந்த அரசாங்கமும் மக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்படும் பணத்தை எந்தவொரு குறிப்பிட்ட மதத்து டனும் தொடர்புடைய மதப் பணிகளுக்காகச் செலவிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்தப் பணம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, மின்சாரம், சுத்தமான குடிநீர் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தரம்வீர் காந்தியும் சரியான கேள்வியை எழுப்பியுள்ளார்.

தர்க்கசீல் சொசைட்டியின் மாநிலக் குழுத் தலைவர்கள் இந்த வீண்செலவைக் கடுமையாக எதிர்த்தனர். கெஜ்ரிவாலின் தீர்த்த யாத்திரைத் திட்டம், இந்துத் தெய்வங்களுக்கான மதச் சடங்குகள் மற்றும் கோயில்கள் கட்டுதல் ஆகியவற்றின் மூலம் இந்து–சீக்கிய வாக்குகளைச் சேகரிக்கும் வகையில் முழுமையான மதவாத அரசியல் நடத்தப்படுகிறது என்று கூறினர்.

இதனால் பிற சமூகங்களிடையே பிளவு ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு பஞ்சாபில் உள்ள விழிப்புணர்வுள்ள மக்களும், அனைத்து அரசியல்,  ஜனநாயக அமைப்பு களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

ஒருபுறம், பஞ்சாப் அரசு கஜானா காலி யாகிவிட்டது என்று கூறி, அரசு ஊழியர்க ளின் 18 சதவீத நிலுவை அகவிலைப்படி (DA), பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. மறுபுறம், பஞ்சாபில் லட்சக்க ணக்கான படித்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள் அரசு வேலை கேட்டுப் போராடு கின்றன.

விவசாயிகளும் தொழிலாளர்களும் பசியால் வாடும் நிலைக்குத் தள்ளப்படுகின்ற னர்; அரசு நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

ஆனால் இதற்கு நேர்மாறாக, மதப் பணிகளுக்கும் தேவையற்ற, போலியான விளம்பரங்களுக்காகவும் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிக்கப்படுகின்றன என்று  அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தர்க்கசீல் சொசைட்டி, பஞ்சாபின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கை களுக்காக நடத்தி வரும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு அளித்துள்ளது. மேலும், பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவிதமான அடக்குமுறை நடவடிக்கையையும் கடுமை யாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *