கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் போராட்டம்: அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) உச்சநீதிமன்றம் ரத்து செய்து, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை முடித்து வைத்தது. மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், டெல்லியில் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டப் பேரணியையும் சி.ஜே.பி. அமைப்பு திரும்பப் பெற்றது; இழப்பீடு வழங்க கொள்கை வகுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*எரிந்த மனித உடலை உண்ணும் சாமியார்: பாஜக ஆளும் மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் இறுதி நிகழ்வூ செய்யப்பட்ட சிதையைத் தொந்தரவு செய்ததாகவும், எரிந்த மனித உடல் எச்சங்களை உட்கொண்டதாகவும் சாமியார் கைது. காளி ‘காளிநந்த கிரி’ என்ற சாமியார், எரியும் சிதையில் இருந்து பகுதி எரிந்த மனித உடல் எச்சங்களை உட்கொண்டதாகவும், அதை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் கைது செய்யப்பட்டார்.

தி இந்து:

* பீகாரின் 75% இடஒதுக்கீட்டை 9ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்: என்.டி.ஏ-வுக்கு தேஜஸ்வி வலியுறுத்தல். பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீடு உள்ளிட்ட 75% இடஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

தி டெலிகிராப்:

* கையால் மலம் அள்ளும் தொழில்: ஜாதியப் பாகுபாட்டை வெளிப்படுத்தும் தொழிலாளர்களின் அவலநிலை. பல மாநிலங்களில் பள்ளியில் பாகுபாடு, மறுவாழ்வு இல்லாமை தொடர்வதாகவும், 63 மாவட்டங்களில் இன்னும் உலர் கழிப்பறைகள் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *