நேபாள பேரிடர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 962 ஆக அதிகரிப்பு!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காத்மாண்டு, செப். 01- நேபாள  வெள்ளப்பெருக்கில் உயிரிழந் தோர் எண் ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது. அங்கே நீர்மின் நிலையங்களில் சிக்கிய 933 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை முற்றிலும் நிர்மூலமாக்கி இருக்கிறது. சாலைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டடங்கள், செல் போன் கோபுரங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் வெள்ளத்துக்கு இரையாகி உள்ளன. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்திருப்பது அடுத்தடுத்து மீட்கப்படும் உடல்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

அந்தவகையில் நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் ஆங்காங்கே மீட்கப் பட்டன. இதன்மூலம் இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள் ளது. காணாமல்போன இந்த தொழிலாளர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அவர்கள் பணியாற்றி வந்த சுரங்கங்களின் வாயில்கள் சேறு சகதியால் மூடியிருப்பதால் மீட்புப்பணிகள் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

எனவே இந்தியாவில் இருந்து சென்றுள்ள சுரங்க மீட்பு வல்லுநர்கள் உதவியுடன், சுரங்கங் களில் மூடியிருக்கும் சேறு சகதி களை நீக்கி வழி ஏற்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. முன்னதாக அப்பர் திரிசூலி-1 மற்றும் லாங்டாங் கோலா பகுதி களில் உள்ள சுரங்கங் களில் சிக்கியிருந்த 279 பேர் மீட்கப்பட்டனர்.

இந்தப் பணிகளில் நேபாள ராணுவ பொறியாளர்கள் நவீன தளவாடங்களுடன் மீட்புப்பணி களை 24 மணி நேரமும் மேற் கொண்டு வருகின்றனர். இதில் அப்பர் திரிசூலி-3ஏ பகுதியில் மட் டும் 90 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளதாக நேபாள பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இதற்கிடையே திபெத்திலும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுமார் 550 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப்பணிகள் நடந்து வருகின்றன. 6 நாட்களாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் இதுவரை 9,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதில் இந்தியா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கணிசமாக மீட்கப்பட்டு உள்ளனர். நேபாளத்தில் நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் இந்தியாவை சேர்ந்த பல்துறை வல்லுநர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

4,500 பேரின் கதி என்ன?

இதில் இடம்பெற்றுள்ள தடயவியல் வல்லுநர்கள், மீட்கப்பட்டு வரும் உடல்களில் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருப்பவற்றில் மரபணுச் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு மரபணுச் சோதனை முடித்தபின் அவை மொத்தமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு மீட்கப்படும் உடல்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.

நேபாள பேரிடர் நிகழ்ந்து 6 நாட்களை கடந்த பின்னரும் சுமார் 4,500 பேரின் கதி என்ன? என்று தெரியாததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *