பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு! பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 1- பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு காவல் விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

‘எப்க்யூஎல்’, ‘விஜி’ ஆகிய கைப்பேசி செயலி கள் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், நாள்தோறும் அமெரிக்க டாலரில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி மாபெரும் நிதி மோசடி நடத்தப்பட்டது.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட் டங்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் இதில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.

மதுரை மேலூர் பகுதியில் பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம் என்பதால் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. மதுரையில் மட்டும் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள நிலையில், 3 நாட்களில் 34,300-க்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து மதுரை சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மேலூர் கட்ட யம்பட்டியைச் சேர்ந்த கல்லாணை, புஷ்பம், பஞ்சு உட்பட 12 பேர், அலங்காநல்லூரில் 5 பேர், நத்தத்தில் 4 பேர் என இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியான மேலூர் ரஞ்சித் மற்றும் அவரது தம்பி அருண் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் களின் 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் சொத்துகளை விற்க தடை விதிக்க பதிவுத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரொக்கம் மற்றும் கூகுள் பே மூலம் பெறப் பட்ட பணம், கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு வாலெட்டுகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் பணத்தை எடுக்க முடியாதவாறு செயலி முடக்கப்பட்டதால் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

இந்த மோசடியில் பன்னாட்டு தொடர்புகள், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஆகியவை அடங்கியுள்ளதால், பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளையும் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *