நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை
50 சதவீதம் உயர்த்தத் திட்டம்?
புதுடில்லி, ஜூன் 30 பெண்களுக் கான நாடாளுமன்ற இடஒதுக்கீட்டை வரும் 2029 மக்களவைத் தேர்த லிலேயே அமல்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
தென் மாநிலங்களின் எதிர்ப்பு
பொதுவாக, மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறு வரையறை (Delimitation) செய்யப்படும் போது, மக்கள் தொகையை வெற்றி கரமாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களின் நாடாளுமன்ற அரசியல் பிரதி நிதித்துவம் (தொகுதிகளின் எண் ணிக்கை) குறையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் இம்மாநிலங்கள் தொகுதி மறு வரையறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னதாக, தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியின் போது காட்டப்பட்ட வலுவான எதிர்ப்பு காரணமாகவே, தொகுதி மறுவரையறை செய்வ தற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற் கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் மாற்று ஆலோசனைகள்
இந்தச் சூழலில், தென் மாநிலங் களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்க ஒன்றிய அரசு இரண்டு முக்கிய திட்டங்களைப் பரிசீலித்து வருகிறது.
1971 கணக்கெடுப்பு முறை: தென் மாநிலங்களின் தொகுதி விகிதம் குறையாமல் இருக்க, தற்போதும் நடைமுறையில் உள்ள 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப் படையிலான மாநிலங்களுக் கிடையேயான தொகுதி விகிதாச்சா ரத்தையே தொடர்ந்து நீட்டிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
50% தொகுதிகள் அதிகரிப்பு
இதனுடன் சேர்த்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் வரை அதிகரிக்கும் திட்டமும் பரிசீல னையில் உள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
