சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

2 Min Read

பீஜிங், ஜூலை 9- சீனாவைத் தாக்கிய சூறாவளி மற்றும் நிலச்சரிவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பயங்கர நிலச்சரிவு

ஆசியாவின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் திடீரென மாறிய வானிலை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெரும் விபரீதத்தைக் கொண்டு வந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை, பயங்கர நிலச்சரிவு மற்றும் கோரமான சூறாவளிக் காற்று ஆகியவை ஒட்டு மொத்த சீனாவையே நிலைகுலையச் செய்துள்ளன.

சீனாவின் வடமேற்குப் பகுதியான கன்சு மாகாணத்தில் உள்ள லோங்னான் என்ற கிராமத்தில் நேற்று அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மொத்தம் 33 பேர் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டனர்.

தொடரும் மீட்புப்பணிகள்

உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் இருந்து 21 பேரை மீட்டனர். எனினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 12 பேரை மீட்க தற்போதும் மீட்புக் குழு தீவிரமாகப் போராடி வருகிறது.

இதற்கிடையே, ஹூபெய் மாகாணத்தை தாக்கிய பயங்கர சூறாவளி, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சூறாவளியால் 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

அதேபோல், ‘மேசக்’ புயல் காரணமாக மற்றொரு பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

சீன அதிபர் ஜின்பிங்

ஒட்டுமொத்தமாக சீனாவில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். “மக்களின் உயிரையும் உடைமைகளையும் காக்கப் போர்க்கால அடிப்படையில் அவசர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுங்கள்” என்று சீன அதிபர் ஜின்பிங் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் அங்கு உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

இதனிடையே சீனாவில் வெள்ளம் சூழ்ந்த பண்ணை ஒன்றிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்றதால் அப்பகுதியில் பாம்புகளால் அச்சம் நிலவும் அசாதாரண சூழலும் ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *