சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய விவகாரம்! தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

1 Min Read

திருவனந்தபுரம், ஜூலை 28- கேரளாவில் 14 வயது சிறுவன் இருசக்கர வாகனம் (ஸ்கூட்டர்) ஓட்டிச் சென்ற வழக்கில், அவரது தாய்க்கு 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சிதறா பகுதியில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையினர் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

அப்போது, 14 வயதே ஆன சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனம் வேகமாக ஓட்டி வந் துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், உடனே அந்த இரு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்திப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, கடைக்கல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசா ரணையின் முடிவில், ஓட்டுநர் உரிமம் பெறாத சிறுவனிடம் வாகனத்தைக் கொடுத்த குற்றத்திற்காக, வாகனத்தின் உரிமையாள ரான அச்சிறுவனின் தாய்க்கு ரூ. 26,000 அபராதம் விதித்து நீதி மன்றம் உத்தரவிட்டது.

மைனர் குழந்தைகள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கப் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந் துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *