செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங்கிற்காக எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் உயரிய விருது!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாசிங்டன், ஆக.27- அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் உயரிய விருது அறிவிக் கப்பட்டுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் (Starlink) சேவைகள் உலகின் பல்வேறு இடங்களுக்கும் செயற்கைக்கோள் மூலம் இணையதள வசதி வழங்கி வருகின்றன.

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா தொடுத்துள்ள போரில், அந்நாட்டின் தொலைத்தொடர்புகளுக்கும், ராணுவ நடவடிக்கைகளுக்கும் இணையதள வசதி தேவைப் படுகிறது.

ஆனால், அத்தியாவசிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள தால் போர்க்காலத்தில், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையவசதி உக்ரைனின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் சேவைகள் வழங்கப் பட்டு வருவதைப் பாராட்டி எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் “ஆர்டர் ஆஃப் பிரீடம்” (Order of Freedom) எனும் உயரிய விருதை வழங்கவுள்ளதாக, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கியின் அலுவலகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், இதுகுறித்து எலான் மஸ்க்கின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, உக்ரைனின் எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமே ஸ்டார்லிங்க் சேவைகளைப் உக்ரைன் ராணுவம் பயன்படுத்துவதற்கு எலான் மஸ்க் அனுமதி அளித்துள்ள நிலையில், ரஷ்ய பகுதிகளிலும் ஸ்டார்லிங்க் சேவையைத் தங்களின் ராணுவம் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *