அவைக்கு வர அமித்ஷாவுக்குத் துணிச்சல் இல்லை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 13- நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரையைக் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

காவல் துறையின் தாக்குதல்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரா கப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதல், அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று (12.8.2026) அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதனிடையே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரையைக் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்று ராகுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பதவி விலக வேண்டும்

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித்ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் குற்றவாளி என்றும், உத்தர விடவில்லை என்றால் அவர் திறமையற்றவர் என்றும், எந்த நிலையிலும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அமித்ஷாவுக்குத்
துணிச்சல் இல்லை

அமித் ஷாவின் பிம்பம் எனும் “பலூன்” காற்றிறங்கி விட்டதாகவும், அதில் மீண்டும் காற்றை நிரப்பக் கடைசி முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியடைந்து “பலூன் வெடித்துவிட்டது”. அமித்ஷாவுக்குத் துணிச்சல் இல்லை, அவரால் அவைக்கு வர முடியாது என்று ராகுல் குறிப் பிட்டார்.

மாணவர் போராட்டங்கள் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா கூறியதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் வெளியாகின.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *