அதிசயம் ஆனால் உண்மை! பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன அய்ந்து அரசு பள்ளிகளை தேடித் தந்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசாம்! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஜான்பூர், ஆக.25 உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள அய்ந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் கட்டடங்களையோ அல்லது அவை உண்மையில் இருப்பதற்கான ஆதாரத்தையோ களத்தில் காண முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்தார்.

லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிங், “ஜான்பூர் மாவட்டத்தில் அய்ந்து தொடக்க பள்ளிகள் உள்ளன. அவை உண்மையில் களத்தில் இல்லை, ஆனால் அரசுப் பதிவுகளில் (UDISE) ‘செயல்படுவதாக’ காட்டப்படுகின்றன” என்று கூறினார்.

வெளிப்படையான சவால் ஒன்றை விடுத்த அந்த ஆம் ஆத்மி எம்.பி., காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த அய்ந்து பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை கண்டுபிடிப்பவருக்கு தனது சொந்த ஊதியத்தில் இருந்து ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

நகர கல்வி அதிகாரி ஒருவரின் கடிதத்தை மேற்கோள் காட்டி, அந்த அய்ந்து பள்ளிகளையும் அவர் அடையாளம் காட்டினார்: தல்கர் டோலா தொடக்க பள்ளி, மிசிர்பூர் பெண்கள் தொடக்கப் பள்ளி, கடான் அர்சானி பள்ளி, உருது பஜார் தொடக்க பள்ளி மற்றும் பாக் ஹாஷிம் தொடக்க பள்ளி ஆகியவை அந்தப் பட்டியலில் அடங்கும். இவை அனைத்தும் அரசு இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன, ஆனால் பட்டியலிடப்பட்ட இடங்களில் அவை தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.

“யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கீழ், நன்கொடைகள், நிலம் மற்றும் சர்க்கரை ஆகியவை திருடப்பட்டதை தொடர்ந்து, இப்போது ‘பள்ளி திருட்டு’ என்ற புதிய முறை உருவாகியுள்ளது. இந்த பள்ளிகள் UDISE இணையதளத்தில் செயல்படுவதாக காட்டப்படுகின்றன. ஆனால் உண்மையில் அங்கு ஆசிரியர்களோ, குழந்தைகளோ அல்லது கட்டடங்களோ இல்லை” என்று அவர் குற்றம் சாட்டினார்.

முன்பு பள்ளி கட்டடங்கள் இருந்தும் அவை மோசமான நிலையில் இருந்ததையும், உள்ளே குப்பைகள் குவிந்து கிடந்ததையும், சமையலறை மற்றும் கழிப்பறைகள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததையும் தான் சுட்டிக்காட்டி இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இருப்பிடமே இல்லாத இந்த அய்ந்து பள்ளிகள் ஏன் இன்னும் UDISE இணையதளத்தில் செயல்படுவதாக காட்டப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிங் வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *