2025-2026-இல் ஒன்றிய அமைச்சர்களின் டில்லி வீடுகளைப் பழுதுபார்க்க மட்டும் ரூ.92 கோடி செலவு! ஆர்டிஅய் தகவல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.24 ஒன்றிய அமைச்சர்களின் டில்லி வீடுகளைப் பழுதுபார்க்க 2025-2026-ஆம் ஆண்டில் ரூ.92 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைந்ததில் இருந்து 2025-2026ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் ஒன்றிய அமைச்சர்களின் தில்லி இல்லங்களைப் பழுதுபார்த்தல், புதுப்பித்தல், பராமரிப்புப் பணிகளுக்காக சுமார் ரூ. 547.68 கோடியை ஒன்றிய பொதுப்பணித்துறை செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவலின்படி, 2014 முதல் 2019 வரை, மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆண்டுக்குச் சராசரியாக ரூ. 26.78 கோடி செல விடப்பட்டிருக்கிறது.

அதன்பின்னர், 2019 முதல் 2024 வரை சராசரியாக ஆண்டுக்கு ரூ. 50 கோடியாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து 2024-2–025-இல் ரூ. 71.98 கோடியாகவும், 2025-2026-இல் ரூ. 92.35 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.

எலெக்ட்ரிக் வயர்கள் பாதிப்பு, கரையான் அரிப்பு, குழாய்கள் மாற்றுதல் உள்ளிட்ட பிரச்சினைகள், 80 முதல் 100 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் என்பதால் இடித்து புதியதாக கட்டப்படும் திட்டம் இருந்ததாகவும் அதன்பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டாதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அமைச்சரவையில் பொதுவாக சுமார் 70 முதல் 72 அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் இருக்கின்றனர். கடந்த நிதியாண்டில் ரூ.92.35 கோடியாக இருந்த நிலையில், ஒரு அமைச்சரின் இல்லத்துக்கு சராசரி செலவு சுமார் ரூ.1.2 கோடியாக அதிகரித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *