என்ன காட்டுமிராண்டித்தனம்!  மனைவிக்காக நரபலியாம்!!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவி தன்னைத் தேடி வர வேண்டி ஒருவர் நரபலி கொடுத்த பகீர் நிகழ்வு நடந்துள்ளது. இதற்காக ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரைக் கொன்று, அவரது தலையை பூஜை அறையில் புதைத்து வழிபட்டுள்ளார். உடலை ஆற்றில் வீசியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த மனைவியை மீண்டும் அடைய இந்தக் கொடூர செயலை செய்துள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

சிரிக்கத் தானே வேண்டும்!

‘‘1961–ஆம் ஆண்டு ஏற்பட்ட காவிரி வெள்ளப் பெருக்கின் போது புதைந்து போன 1008 சிவலிங்கங்களை மீட்க வேண்டும்’’ என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தி உள்ளார். இதை நினைத்தால் வயிறு முட்ட சிரிப்புதான் வருகிறது தன்னையே காத்துக் கொள்ள முடியாத சிவலிங்கங்களை மனிதர்கள் தான் காப்பாற்ற வேண்டுமா மனிதனை கடவுள் காப்பாற்றாத கடவுளை மனிதன்தான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னால் குடியரசு தலைவர் சொல்லி இருப்பதை நினைத்தால் வயிறு முட்ட சிரிக்க தானே வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *