விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக 25- காவிரியில் தமிழ்நாட்டிற்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்திய நாதன் ஆஜராகி, தமிழ்நாட்டிற்கு விகிதாச் சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமையாக கிடைக்க வில்லை என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, கருநாடகம் நீரை திறந்து விட்டுள்ளதாக கூறுகிறது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரவுகளை பார்க்கும்போது, தற்போதைய நிலையில் தமிழ்நாட்டிற்கு நீர் வருவதில் பிரச்சினை இல்லை என்பது தெரிகிறது. அவ்வாறு இருக்கும்போது நீர் வரவில்லை என எப்படி கூறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசுத் தரப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விகிதாச்சார அடிப்படையில் நீர் திறக்க உத்தரவிடுவதில்லை. இதன் காரணமாகவே, தமிழ்நாட்டிற்கு தற்போது நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகி முறையிடுவது தானே சரியான நடைமுறை என தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில், 25.8.2026 (இன்று) காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ள தாகவும், அதில் தமிழ் நாட்டின் கோரிக் கையை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கருநாடக அணைகளில் 78 டிஎம்சி-க்கும் அதிகமாக நீர் இருந்தும் தமிழ் நாட்டிற்கு உரிய நீரை வழங்க மறுத்து வருவதாகவும், எனவே, உச்ச நீதிமன்றத்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீரை கருநாடகம் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது இதையடுத்து நீதிபதிகள், அணைகளில் உரிய தண்ணீர் இருந்தும் தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதில் கருநாடகாவுக்கு என்ன பிரச்சினை? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு கருநாடகா தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் ஆஜராகி, இதுகுறித்து தரவுகளுடன் உரிய விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள், தற்போது இரு மாநிலங்களின் வாதங்களையும் கேட்கப் போவதில்லை என தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசு தங்களது கூடுதல் கோரிக்கைகள் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையிட லாம் என அறிவுறுத்தினர்.

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டின் கோரிக் கைகளை பரிசீலிக்கவில்லை என்றால், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக லாம் என தெரிவித்தனர். இதைய டுத்து, வழக்கை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அது வரையிலான காலகட்டத்தில் கருநாடகம் திறந்த நீரின் அளவு மற்றும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் பெற்ற நீரின் அளவு உள்ளிட்ட தரவுகளை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *