பெல்ஜியம் ரயில் மோதி விபத்து பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு

1 Min Read

பிரஸ்ஸல்ஸ், மே 29– பெல்ஜியத்தில் தண்ட வாளத்தை கடக்க முயன்ற பள்ளி சிறிய வேன் மீது ரயில் மோதிய விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அய்ரோப்பிய நாடான பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருந்து வடமேற்கே உள்ள புக்கன்ஹவுட் என்ற பகுதியில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.

26.5.2026 அன்று காலை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக 120 கி.மீ., வேகத்தில் வந்த ரயில், பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பள்ளிவேன் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் இரண்டு குழந்தைகள், ஓட்டுநர், உதவியாளர் என 4 பேர் உயிரிழந்தனர். அய்ந்து குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தும் வேன் ஓட்டுநர் தண்டவாளத்தை கடக்க முயன்றாரா அல்லது சிக்னல் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *