இப்படியும் மனிதர்களா?

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தெலங்கானா மாநிலம் இந்தாரம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது உள்ள லலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் கரீம் நகரில் மருத்துவ உதவி அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை சீர்பட்டு வரவில்லை. அதனால் அவரை வீட்டில் வைத்து பராமரிப்பது கடினம் என்று வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்கின்றனர். மருத்துவமனையில் இருந்து அவரை குடும்பத்தினர் ஒரு காரில் அழைத்துச் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரை விட்டு விட்டு சென்று விட்டனர். அந்த வழியாக வந்த ஒருவர் அதை கவனித்து 108 ஆம்புலன்ஸ்க்குத் தகவல் அளித்தார். குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தும் அதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இப்படியும் கூட மனிதர்களா!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *