ஏழைகளில் உயர்ஜாதி ஏழை– கீழ்ஜாதி ஏழையா? உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடா?

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம்!
மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்

மதுரை,  ஆக.22  சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்களின் வளர்ச்சிக்குக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டில், பொருளாதார அளவு கோலைத் திணித்து, சமூக நீதியைச் சாகடிக்கும் நீட்டையும், EWS–யும் எதிர்த்து, திராவிடர் கழகத்தின் சார்பில்,  ஆறு மய்யங்களில் இருந்து புறப்பட்டு, நான்கு நாள்கள் நடக்கும் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் குறித்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்!

இன்று (22.8.2026) “நீட்” தேர்வையும், உயர்ஜாதி யினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (22.8.2026 முதல் 25.8.2026 வரை – நான்கு நாட்கள்) நடைபெறுகின்றன.  மதுரையில், இவ்வாகனப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

நீட், EWS கொடுமைகளை விளக்கி, தமிழ்நாடு முழுவதும்
இரு சக்கர வாகனப் பரப்புரை

ஊழலின் ஊற்றுக்கண்ணாக, இந்த ஊழல், உச்சநீதிமன்றத்திலேயே அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. அதுமட்டுமல்ல, தலைநகர் டில்லியிலேயே மாணவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அதுபோலவே, EWS என்ற பெயராலே, ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. அரசு, தேவையில்லாமல், ஏழைகளிலேயே இரண்டு பிளவாக்கி, அதில் உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும்,  நாளொன்று ரூ.2,500 சம்பாதிக்கின்றவர்கள், ஏழைகள் என்ற முத்திரை குத்தி, உயர்ஜாதிக்காரர்களுக்கு எல்லா இடங்களையும், வசதிகளையும் கொடுக்கக் கூடிய அக்கிரமமான சமூக அநீதியைக் கண்டித்து, நாடு தழுவிய போராட்டத்தினை, நீட் தேர்வு வந்ததிலிருந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம். இப்போது அது விரிவாகி இருக்கிறது.

தமிழ்நாடு – புதுச்சேரியில்
ஆறு குழுக்களாகப் பிரச்சாரம்!

அவற்றை விளக்கிச் சொல்வதற்காக, ஆறு குழுக்களாக இளைஞர்கள் இன்று (22.8.2026) பிரச்சாரத்தினைத் தொடங்கியிருக்கிறார்கள். நான்கு நாள்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில், கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி வரையில் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் செய்யவிருக்கிறார்கள்.

அதனைத் தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறேன்.

செய்தியாளர்: நேற்று (21.8.2026) சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினைப்பற்றி, அமைச்சர் நிர்மல் குமார் தவறாகச் சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: நீட் தேர்வு, EWS இட ஒதுக்கீடு இவற்றினை விளக்கி, தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சென்று, மக்களிடையே விளக்குகின்ற பணியை திராவிடர் கழகம் இன்று மேற்கொள்கிறது. அதுகுறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

அப்படியில்லாமல், வேறு கேள்விகளை நீங்கள் கேட்டால், இந்தப் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும்.

அரசியல் என்பது பொதுவாக இருக்கவேண்டும். ஜனநாயகம் என்று சொல்வது, எதிர்க்கட்சிகளுக்கு மரி யாதைக் கொடுக்கக் கூடியதாகவும், கருத்துள்ளதாகவும் இருக்கவேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளை நசுக்கு வதோ, குரல்வளையைப் பிடிப்பதோ ஜனநாயகம் ஆகாது.

ஆட்சி, ஆட்சியாக இருக்கவேண்டும்; காட்சியாக இருக்கக் கூடாது.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *