இந்திய அரசியலில், வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் விளம்பரங்களை வெளியிடுகின்றனர். இத்தகைய விளம்பரங்களுக்கான கட்டணங்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இந்த விளம்பரங்களில் இடம் பெறும் காட்சிகள் மற்றும் தகவல்கள் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கும், உண்மை அறியும் குழுக்களின் ஆய்விற்கும் உள்ளாகின்றன.
அண்மையில், பா.ஜ.க வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் ‘இது புதிய இந்தியா’ என்ற வாசகத்துடன் நாட்டின் வளர்ச்சி குறித்த ஒரு காணொலி வெளியிடப்பட்டது. ‘நாங்கள் கனவு மட்டும் காணமாட்டோம் அதை நினைவாக்கியும் காட்டுவோம்’ என்ற அந்தக் காணொலியில் ஒரு அதிநவீன மலைப்பாதை காட்டப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
சமூக ஊடக பயனர்கள் மற்றும் உண்மை அறியும் குழுக்களின் ஆய்வின்படி, மோடி அரசின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள மலைப்பாதை இந்தியாவில் உள்ளதல்ல. இது பாகிஸ்தானில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாலை பாகிஸ்தானின் இமயமலைப் பள்ளத்தாக்கு மாகாணமான பாலுசிஸ்தான் – சீனா இணைப்புச்சாலை. இது சீனா – ஆப்கான் மற்றும் மேற்காசிய நாடுகளை இணைக்கும் சரக்குப் போக்குவரத்துப் பாதை – உலகத்தரம் வாய்ந்தவை,
சீனாவிலிருந்து காராச்சி துறைமுகத்திற்கு பல நூறு சரக்கு வாகனங்கள் அன்றாடம் செல்லும் பாதை, சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் என்பதோடு சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
இந்தியாவின் வளர்ச்சியைப் பறைசாற்றும் விளம்பரத்தில் அண்டை நாட்டின் உட்கட்டமைப்பு காட்சிகளைப் பயன்படுத்தியது அரசியல் ரீதியாக பெரும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது
போலி பிம்பம்: நாட்டின் உண்மையான வளர்ச்சித் திட்டங்களைக் காட்டுவதற்குப் பதிலாக, வெளிநாட்டுக் காட்சிகளைப் பயன்படுத்தி மக்களிடையே ஒரு தவறான பிம்பத்தை மட்டுமே உருவாக்கி மக்களை ஏய்த்து வருகின்றனர்
12 ஆண்டுகளாக போலியையே காட்டி மக்களை ஏய்த்துப் பிழைப்பதையே மோடி மற்றும் அவரது சகாக்கள் சளைக்காமல் செய்து வருகிறார்கள்
2014ஆம் ஆண்டு மோடி குஜராத்தை உலகத்தரம் வாய்ந்த மாநிலமாக மாற்றிவிட்டார் என்று கூறி சீனாவின் சாங்காய் நகர பேருந்து நிலையத்தையும், துருக்கி சாலையையும் அகமதாபாத் பேருந்து நிலையம் போன்றும், குஜராத் மாநில நெடுஞ்சாலை போன்றும் நாளிதழ்களில் விளம்பரம் தந்தார்கள் இது தொடர்பான செய்திகளை உண்மை அறியும் குழு வெளியிட்ட போதும் தொடர்ச்சியான போலி ஒளிப்படங்களையே இன்றுவரை வெளியிட்டு வருகின்றனர்.
மக்களும் இந்தப் 12 ஆண்டு காலத்தில் உண்மை எது? போலி எது? என பிரித்துப் பார்க்கும் தன்மையை இழந்துவிட்டனர்.
அரசாங்கம் அல்லது ஒரு ஆளுங்கட்சி வெளியிடும் அதிகாரப்பூர்வத் தகவல்களின் நம்பகத்தன்மை இதனால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
இதன்படி பாஜக ஆட்சி பீடத்தில் அமர்ந்தது முதல் இன்றுவரை போலியையே மக்களிடம் காட்டி ஏமாற்றி வருகிறது, மக்கள் உண்மையை உணரக்கூடாதுஎன்பதற்காக அன்றாடம் ஏதாவது மதப் பிரச்சினையை உருவக்கி குழப்பி வருகிறது.

