‘எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க நிதி இருக்கிறது, விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நிதி இல்லையா?’- விவசாயச் சங்கங்கள் கண்டனம்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கடலூர், ஆக. 20- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வாகனம் (கார்), பராமரிப்புச் செலவு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19.8.2026 அன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து அரசு வாகனங் களை பராமரிப்பதற்காகவும், வாகனத்துக்கு ஓட்டுநர், எரிபொருள் உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம், அலுவலக உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதற்காக உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆணைகள் வெளியிடப் படும் என்றார். இதற்கு விவசாயச் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப் பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் விடுத்துள்ள அறிக்கையில், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க, உதவியாளர்கள் நியமிக்க சம்பளம் கொடுக்க நிதி இருக்கும்போது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய நிதி இல்லையா அல்லது மனம் இல்லையா முதல்வரே.

234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்க நிதி இருக்கு. ஆனால், எதைக் கேட்டாலும் அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது எனக் கூறுகிறீர்கள். நம்முடைய முதலமைச்சர் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் ஊரான் வீட்டு நெய்யில் உங்களுக்கு ஸ்வீட்டா முதல்வரே. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் இல்லை.

விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. காவேரி மற்றும் கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் ஒரு ஆண்டிற்கு 20 தடுப்பணைகள் கட்டலாம். நிலத்தடி நீர்மட்டம் உயரும், மீன்பிடித் தொழிலும் பெருகும். லட்சக்கணக்கான விவசாயிகளும் மீன் பிடித் தொழிலாளர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மாற்றம் மாற்றம் என்றீர்களே. இதுதான் அந்த மாற்றமா முதலமைச்சரே. இது மாற்றம் இல்லை, மக்களுக்கு ஏமாற்றமே” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *