வங்கதேச அதிபர் தேர்தலில் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெற்றி

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

டாக்கா. ஆக. 21- வங்கதேச நாட்டின் 23ஆவது அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் 255 வாக்குகளை அவர் பெற்றார்.

கடந்த 2024இல் வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட் டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

அப்போதைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகும், ஹசீனா ஆதரவாளரும் 1971 விடுதலைப் போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் மட்டுமே அரசியல் சாசனப் பதவியான அதிபர் பொறுப்பில் நீடித்து வந்தார்.

இதன் பின்னர் பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான தற்போதைய புதிய அரசுடன் ஏற்பட்ட இணக்கமற்ற அரசியல் சூழல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக முகமது ஷஹாபுதீன் தனது பதவியிலிருந்து அண்மையில் விலகினார். இதையடுத்து அதிபர் தேர்தலை அறிவித்தது அந்நாட்டுத் தேர்தல் ஆணையம்.

அதன்படி நேற்று (ஆக.20) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 343 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் தங்களது வாக்குகளை செலுத்தினர். பிற்பகல் 2 முதல் 5 மணி வரை இந்த தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆளும் தரப்பில் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் மற்றும் 11 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அகமது போட்டியிட்டனர். இதில் ஆலம்கீர் 255 வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

கடந்த 35 ஆண்டுகளில் அந் நாட்டு தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் முறை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

யார் இந்த ஆலம்கீர்?

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆலம்கீர், வங்கதேச தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக செயல்பட்டவர். கடந்த 2016 முதல் அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படும் வரையில் இந்தப் பதவியை அவர் கவனித்தார். தற்போது இந்த கட்சி தான் அந்நாட்டில் ஆட்சியில் உள்ளது.

கடந்த 1990 முதல் வங்கதேச தேசியக் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பொருளியல் பட்டம் பெற்றவர். ஆசிரியராக பணியாற்றி உள்ளார். கட்சி மற்றும் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 78 வயதான அவர், இன்று (வெள்ளிக்கிழமை) வங்கதேச அதிபராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *