வகுப்பறை வேண்டி சிவகங்கை அரசுக் கல்லூரி மாணவிகள் போராட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சிவகங்கை ஆக. 20- சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிபிஏ பாடப் பிரிவில் மொத்தம் 300 மாணவிகள் உள்ளனர். ‎இதற்கு 6 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், இத்துறைக்கு 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.

போதிய வகுப்பறைகளை ஒதுக்க வேண்டுமென நேற்று (19.8.2026) காலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இந்திராவை சந்தித்து மனு கொடுக்கச் சென்றனர். ஆனால், அவரை சந்திக்க அனுமதிக்காததால், மாணவிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாக கேட்டை பூட்டியதால், உள்ளேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.வெயிலின் தாக்கத்தால் 12 மாணவிகள் மயக்கமடைந்தனர்.

அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, சக மாணவிகளே ஆம்புலன்ஸை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்து மயக்கமடைந்த மாணவிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் சிவராமன் போராட்டம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *