மேட்டூர் அணையைத் திறக்கத் திட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சேலம், ஆக. 26–  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப் பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூர் வந்து செல்லும் வகையில் முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

மேட்டூர் அணையி லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்நிலையில், நடப்பாண்டில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்கு நீர் திறக்க முடியவில்லை. இந்நிலையில், கருநாடகாவில் இருந்து திறக்கப்படும் உபரிநீரால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 88.21 அடியைக் கடந்து, விரைவில் நீர் மட்டம் 90 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த, நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவால் கருநாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீர் திறக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

எனவே, மேட்டூர் அணையில் இருந்து அடுத்த சில நாட்களில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மேட்டூர் வந்து, அணையில் இருந்து டெல்டாவுக்கு நீரை திறந்து வைப்பார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *