
திருச்சி, ஏப்.12- திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவிகள் 34 பேர் 2024-2025ஆம் ஆண்டுக்கான ஏ சான்றிதழ் தேர்வில் பங்கேற்று அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்று ஏ கிரேடு பெற்று பயன் அடைந்துள்ளனர். இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

