ஹார்முஸ் நீரிணையில் 20 அமெரிக்க போர்க் கப்பல்கள் முகாமிட்டிருப்பதால் பதற்றம்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வாசிங்டன். ஆக. 11- ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெற்று வரும் நிலையில், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நிரிணை கடல் பகுதியில் அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளதால் பதற்றம் தொடர்கிறது.

இருதரப்பு இடையி லான மோதலை தவிர்க்க ஈரானுடன் பேச்சு வார்த் தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதே வேளை யில், பன்னாட்டு கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான் உலகின் மிக முக்கிய மான எண்ணெய் போக் குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரானிய கடற்படையால் ஆபத்து நேரிடக் கூடாது என்ப தற்காக, அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களைப் பிராந்திய எல்லைக்கு அருகே கொண்டு வந் துள்ளதாக ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் இந்த நகர்வு, ஈரானுக்குக் கொடுக்கும் நேரடி அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் பேச்சுவார்த் தைக்கான கதவுகள் திறந் திருப்பதாக அறிவிக்கப் பட்டாலும், மறுபுறம் போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடை யிலான இந்த மோதல் போக்கு, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை மற்றும் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *