மூடநம்பிக்கைக் கேடு! கோமியத்தை குடிக்கும்படி பெண்ணை வற்புறுத்திய கணவர்மீது வழக்கு

2 Min Read

தானே, ஜூலை 13– சிவசேனா (உத்தவ் அணி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத். இவரது மகன் கீதேஷ் ராவத். இவர்கள் ஃபிரோஷ் பாபா, காசி பாபா என்ற இரு சாமியார்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து மாந்தீரிக பூஜை செய்துள்ளனர்.

அப்போது கீதேஷ் ராவத்தின் மனைவி கிரிஜாவை அந்த பூஜையில் கலந்து கொள்ளும்படி கூறியுள்ளனர். அவரது தலை முடியை கத்திரித்து சூனியம் செய்துள்ளனர். அப்போது சாமியார்கள் பூஜை செய்து அளிக்கும் கோமியத்தை குடிக்கும்படி கிரிஜாவை, மாமனார் விநாயக் ராவத், கணவர் கீதேஷ் ராவத் ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கிரிஜா அளித்த புகாரின் பேரில் கணவர் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

வீட்டுக் கூரைகளில் சூரிய மின்சாரம்

 இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.8,455 கோடி நிதி

புதுடில்லி, ஜூலை 13- இந்தியாவில் வீடுகளின் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டத்தை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், ரூ.8,482 கோடி (890 மில்லியன் டாலர்) கடனுதவி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

ஒன்றிய அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கிய ‘பிரதமரின் சூர்யகர்: முப்த் பிஜ்லி யோஜனா’ திட்டம், வீடுகளின் கூரைகளில் சூரிய மின் தகடுகள் அமைப்பதை ஊக்குவிக்கும் திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளில் கூரைமேல் சூரிய மின்சார அமைப்புகள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக சூரிய மின்சார தகடுகள் அமைக்க ஒன்றிய அரசு மானியம் வழங்குகிறது.

இந்த திட்டத்திற்கு உலக வங்கி 89 கோடி டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,455 கோடி நிதி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கோடி வீடுகளில் கூரைமேல் சூரிய மின்சார அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.

உலக வங்கியின் நிதியுடன் சேர்த்து, வணிக வங்கிகள் மூலம் சுமார் 420 கோடி டாலர் (ரூ.39 ஆயிரத்து 900 கோடி) அளவிலான தனியார் கடன்களும் திரட்டப்பட உள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் சூரிய மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கான நிதி வசதிகளை எளிதாகப் பெற முடியும். இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சுமார் 17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக சூரிய மின்சார உபகரணங்கள் உற்பத்தி, நிறுவுதல், பராமரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வீடுகளின் கூரைகளில் சூரிய மின்சார பலகைகள் அமைக்கப்படுவதால் குடும்பங்களின் மாதாந்திர மின்கட்டணம் கணிசமாக குறையும். அதே நேரத்தில், மின்சார வினியோக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் விற்பனையாளர்களின் சேவைத் திறனும் மேம்படும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *