வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை! தமிழ்நாடு அரசுக்கு தாக்கீது!

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும். செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும் தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மது பிரேமநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று (10.8.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திருத்த விதிகளுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் எங்களுக்கு சொந்தமானது. அவற்றை எங்கு விற்க வேண்டும்
என்பதை முடிவெடுக்க உரிமம் பெற்றவர்களுக்கு உரிமை உள்ளது.

அதனால், வெளிமாநிலங்களுக்கு கற்களை கொண்டு செல்ல தடை விதித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்கவேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *