மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி தலைமையில் குழு! அமைச்சர் தகவல்

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 11- ‘‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்’’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்து வராகும் கனவு வீணாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டுவந்து, படிப்புக்கான முழு செலவையும் அரசு ஏற்பதாக அறிவித்தது.

இதனால், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, இந்த இடஒதுக்கீட்டின் மூலம் கடந்த 2020-2021ஆம் ஆண்டில் 435 பேர், 2021-2022இல் 555 பேர், 2022-2023இல் 584 பேர், 2023-2024ஆம் ஆண்டில் 625 பேர், 2024-2025ஆம் ஆண்டு 625 பேர், 2025-2026ஆம் ஆண்டில் 630-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களில் சேர்ந்தனர்.

அரசு பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இடஒதுக் கீட்டை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறும்போது, ‘‘7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்ய இருக்கிறோம். அதற்காக நீதிபதி தலை மையில் குழு அமைக்கப்பட உள்ளது’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *