சிறு நூல்களாக…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
அன்றாடம் இல்லத்துக்கு வரும் ‘விடுதலை’ நாளிதழைப் படிப்பதனால், நடப்புச் செய்திகளைப் பற்றிய துல்லியமான விளக்கமும், எதிரதா நோக்கும் தங்கள் சிந்தனையும், புதிய பிரச்சினைகளைத் திறனாய்வு நோக்கில் காணும் தங்கள் ஆற்றலும், மன நிறைவைத் தருகின்றன. தங்களது அறிக்கைகளையும், பல்வேறு சொற்பொழிவுகளையும் கவனமுடன் திருத்தமுறப் பார்த்து (Editing) அப்போதைக்கப்போது சிறு நூல்களாக வெளியிடலாம். எதிர்காலச் சந்ததிக்கு அது செய்திக் களஞ்சியமாகத் திகழும்.
முனைவர் பழனி. அரங்கசாமி
மேனாள் பல்கலைக் கழகப் பேராசிரியர், தஞ்சாவூர்
