பெரியகுளத்தைக் கவர்ந்த ஆசிரியரின் சிறப்புரை

பெரியகுளத்தில் 6.6.2026இல் தங்களை சந்திக்கும் வாய்ப்பும் – சிறப்பான அறிவுப் பூர்வமான உரை கேட்கும் வாய்ப்பும் கிடைத்தமைக்கு பெரிதும் மகிழ்கின்றேன்.

தாங்கள் பங்கேற்கும் வகையில் டாக்டர் கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவைப் பெரியகுளத்தில் நடத்த அனுமதி வழங்கியமைக்கு வணக்கங்கள்.

பொதுக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தங்களுடைய பதில்கள் அருமையானவை – ஆணித்தரமானவை – தெளிவான கருத்துகள் (செய்தியாளர்கள் மிக மகிழ்ச்சியடைந்தனர்).

தடுமாறாமல் அய்யா பேசியது குறித்து பலரும் நேரில், போனில் பேசி வருகின்றார்கள். ‘‘எப்படி அய்யாவால் இந்த 93 வயதில் இருக்க முடிகிறது. தெளிவாகப் பேச முடிகிறது?’’ என்று கேட்டபோது – கொள்கையில் உறுதி,  உணவுக் கட்டுப்பாடு – தெளிவான அறிவு, அறிவியல் பூர்வமான சிந்தனை என்று நான் பதில் கூறி வருகின்றேன்.

இனிய நண்பர் ஒபிஎஸ் அவர்கள் மேடைக்கு வந்து சென்றார்கள். அவசர அவசியம் கருதி சென்னை செல்வதாகவும், ஆசிரியர் அய்யா அவர்கட்கு வணக்கத்தை தெரிவிக்கக் கூறி ‘‘போனில் பேசுகிறேன்’’ என்றார.்

குன்றி இருந்த தி.மு.க. தோழர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும்படியாக இருந்தது என தி.மு.க. பிரமுகர் கூறினார் – உண்மைதான்.

சால்வை அளிக்கும்போதும்,  பழங்கள் கொடுக்கும் போதும் எழுந்து நின்று இந்த வயதில் வாங்கியது பிரமிப்பாக மகிழ்ச்சியாக இருப்பதாக – மணி கார்த்திக் (வெற்றித் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் வைரமுத்து) கூறினார்.

காவல்துறை உயர் அதிகாரிகள் ‘‘அய்யா அருமையாகப் பேசினார் – வரலாற்று ஆவணங்களை மேற்கோள்காட்டி ஆதாரத்துடன் பேசினார்’’ என்று எனக்குக் கை கொடுத்தார்கள்

‘‘ஏம்பா அன்பு, ஆசிரியர் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு; நான் மட்டும்தான் என்று நினைத்தால் சேரில் அமர்ந்து இருந்த இருநூறு நபர்களும் எழுந்து செல்லாமல் அப்படியே கூட்டம் முடியும் வரை இருந்து மகிழ்ந் தார்கள்’’  என கூறினார்கள்.

நான்கு – அய்ந்து பேர் ‘‘கூட்டம்னா எங்களிடம் நன்கொடை கேளுங்கள்; எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றார்கள்.

மறைந்த சுயமரியாதை குடும்பத்தை சார்ந்த உ.மு.சங்கர், தங்கராசு, பரசுராமன், ராமசுப்பு, தனிக்கோடி இராமையா, வெங்கிடசாமி குடும்பத்தினர் எனக்கு நன்றி கூறினார்கள். எங்கள் தாத்தா, அப்பாவை நீங்கள் நினைவுபடுத்தி நோட்டீஸ் இடம் பெறச் செய்தமைக்கும் – ஆசிரியர் அய்யா அவர்களை நினைவு கூர்ந்தமையும் மறக்க முடியாதது – மிக சிறப்பான பொதுக் கூட்டம்.

தங்கள் உரை காதுகளில் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே உள்ளது.

– மு. அன்புக்கரசன்

திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர், பெரியகுளம்

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *