வெளிநாட்டு நன்கொடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் எப்.சி.ஆர்.ஏ. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

2 Min Read

புதுடில்லி, ஆக.10-  வெளி நாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப் பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தற்போது சட்டத்தில் மேலும் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்கு முறை) திருத்த மசோதா 2026 (எப்சிஆர்ஏ) வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் எந்த மாநிலத்தில் என்னென்ன தொண்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) உறுதிமொழி பத்திர மாக தாக்கல் செய்ய வேண்டும்.

வெளிநாட்டு நன்கொடைகளை ஒருபோதும் மதமாற்றத்துக்கு பயன் படுத்தக் கூடாது. என்ஜிஓக்களின் (தொண்டு நிறுவனங்கள்) பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளி நாட்டு நன்கொடைகளால் உருவாக்கப்பட்ட என்ஜிஓக்களின் சொத்துகளை அரசு நிர்வாகமே கையாளும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் 22,498 என்ஜி ஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 15,212 என்ஜிஓக்களின் பதிவு காலாவதியாகி உள்ளது. சுமார் 14,449 என்ஜிஓக்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. எப்சிஆர்ஏ மசோதாவின் மூலம் உரிம பதிவு ரத்து செய்யப்பட்ட என்ஜிஓக்களின் சொத்துகளை அரசு நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதே காரணத்தை சுட்டிக் காட்டி பல்வேறு கிறிஸ்தவ, முஸ்லிம் மதம் சார்ந்த என்ஜிஓக்களும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் கொறடா உத்தரவு

வரும் 13-ஆம் தேதியுடன் நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடர் நிறைவடைகிறது. அதற்குள்ளாக எப்சிஆர்ஏ மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்த மசோதாவை நிறைவேற்ற மக்களவை, மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதிய பலம் உள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10, 11, 12 தேதிகளில் கண்டிப் பாக மக்களவை, மாநிலங்கள வையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக எப்சிஆர்ஏ மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *